விசேட சுற்றிவளைப்பில் 1,800 பேர் கைது

நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நேற்று இரவு 11 மணிமுதல் இன்று அதிகாலை 3 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் ரகுணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 962 பேரும், பிடியாணைகள் தொடர்பில் 758 பேரும், தேடப்பட்டுவந்த 86 சந்தேகநபர்கள் உள்ளிட்ட 1800க்கும் அதிகமானேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட விரோத மதுபானம் மற்றும் […]

ஆற்றில் வீழ்ந்து லொறி விபத்து

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று பிற்பகல் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர், ஹட்டன், டிக்கோயா வனராஜா  தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நோர்ட்வூட்டிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில்வி எருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். எனினும் வீதியோரம் காணப்பட்ட மின்கம்பம் சேதமடைந்துள்ளதாக ஹட்டன்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சூரியவெவவில் விபத்து; ஒருவர் பலி

சூரியவெவ ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் மஹஆர 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து வீதியால் சென்று கொண்டிருந்த பாதசாரியொருவரை மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நபடகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான நபரொருவரே இவ்வாறு மோட்டார் சைக்கிளில் மோதுண்ட உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது […]

15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் விநியோகம் இன்று மா‍லை முதல் முழுமையாக வழமைக்கு திரும்பும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 15 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான எரிபொருள் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தின் அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் இன்னும் எரிபொருள் பெறுவதில் தாமதம் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்,