தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வலி­யு­றுத்தி சாய்ந்­த­ம­ருதில் மனித சங்­கிலிப் போராட்டம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை ஏற்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போராட்­டங்­களில் ஓர் அங்­க­மாக நேற்று சாய்ந்­த­ம­ருது நகரில் மனித சங்­கிலிப் போராட்டம் இடம்­பெற்­றது. சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பெரிய பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா தலை­மையில் நடை­பெற்ற இப்­போ­ராட்­டத்தில், உல­மாக்கள், கல்­வி­மான்கள், மரைக்­கா­யர்கள், வர்த்­த­கர்கள், இளை­ஞர்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் பங்­கேற்­ற­துடன் அவர்கள் நெடுஞ்­சாலை நெடு­கிலும் கைகோர்த்த வண்ணம் நின்று சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வலி­யு­றுத்தி பல்­வேறு கோஷங்­களை எழுப்­பினர்.

காணாமல் போன பாட­சாலை மாணவன் பத்­தனை ஆற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்பு!

(க.கிஷாந்தன்) திம்­புள்ள, பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட போகா­வத்தை பகு­தி­யி­லுள்ள ஆற்­றி­லி­ருந்து போகா­வத்தை பகு­தியைச் சேர்ந்த ஆறு வயது மாண­வனின் சடலம் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இம்­மா­ணவன் கடந்த 11 ஆம் திகதி பகல் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்­பாத நிலையில் உற­வி­னர்கள், பிர­தே­ச­வா­சிகள் பிர­தேசம் முழு­வதும் உற­வினர் வீடு­க­ளிலும் தேடி­யுள்­ளனர். இவர் தொடர்­பாக எவ்­வித தக­வலும் கிடைக்­காத நிலையில்,  இன்று காலை பிர­தே­ச­வா­சிகள் தேடுதல் மேற்­கொண்ட போதே ஆற்றில் சட­ல­மாக […]

நோர்வூட் வெஞ்சர் தோட்­டப்­ப­கு­தியில் போதைப் பொரு­ளுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) நோர்வூட் வெஞ்சர் தோட்­டப்­ப­கு­தியில் போதைப் பொரு­ளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பெற்றோல் நெருக்கடி தொடர்பான அமைச்சரவை உப குழு அறிக்கை நாளை மறுதினம் – அமைச்சர் சரத் அமுனுகம

பெற்றோல் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை உபக் குழு அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூவரடங்கிய அமைச்சரவை உபக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த உப குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்து குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் […]

‘ஜங்கிள் புக்’ பாணியில் மீண்டும் உருவாகும் ‘லயன் கிங்’: பாடகி பியோன்ஸேவும் இணைகிறார்

வேல்ட் டிஸ்னி நிறுவனத்தின் ‘லயன் கிங்’ படம் மீண்டும் லைவ் அக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவாகிறது. படம் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவான பியோன்ஸே நொவெல்ஸும் இப் படத்தில் பங்காற்ற வுள்ளார். டிஸ்னி நிறுவனத்தின் புகழ்பெற்ற அனிமேஷன் படங்களில் ஒன்று ‘லயன் கிங்’. ஷேக்ஸ்பியரின் ‘ஹொம்லெட்’ கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் 1994ஆம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அத்துடன் பல […]