புதிய காத்தான்குடியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(புதிய காத்­தான்­குடி நிருபர்) மட்­டக்­க­ளப்­பு — ­காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புதிய காத்­தான்­குடி பகு­தியில் கேரள கஞ்­சாவை விற்­பனை செய்த நபரை காத்­தான்­குடி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த நபர் கேரள கஞ்­சா­வை விற்­பனை செய்யும் நோக்கில் வீட்டில் பதுக்கி வைத்­தி­ருந்த நிலையில் தக­வ­லொன்­றை­ய­டுத்து பொலிஸார் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்து சந்­தேக நபரை கைது செய்­த­துடன், அவ­ரி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு கேரள கஞ்­சாவும் மீட்­கப்­பட்­ட­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜரான பெண் மதுபோதையில் குழப்பம்! பொலிஸார் மீதும் தாக்குதல்:

(எஸ்.கே.) வழக்கு விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றத்­துக்குச் சென்ற பெண் ஒருவர் அதிக மதுபோதையில் குழப்பம் ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொண்­டதால் கல்­க­முவ நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 10 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை சுமார் 15 நிமி­டங்கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட வழக்­கொன்­றுக்கு ஆஜ­ரா­வ­தற்­காக இப்பெண் அன்­றைய தினம் நீதி­மன்­றத்­துக்கு வந்து, பின்னர் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேறி மீண்டும் நீதி­மன்­றத்­துக்கு வந்­த­போது பிர­தான வாயி­லிலி­ருந்த பொலி­ஸா­ருக்கு இப்பெண் மீது சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. பொலிஸார் அப்­பெண்ணை சோத­னை­யிட்­ட­போது அப்பெண் மது அருந்­தி­யி­ருப்­பதை அறிந்து […]

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வர்மா’

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கின்றார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பெர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாலா. தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகி வசூல் குவித்த இந்த படத்திற்கு தமிழில் ‘வர்மா’ என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா. இந்த படத்தின் கதாநாயகி, தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த […]

பெண்ணின் புகைப்­ப­டங்­களை பேஸ்­புக்கில் வெளி­யிட போவ­தாக அச்­சுறுத்தி இரு தட­வைகள் பணம் பெற்ற கிராண்ட்பாஸ் நபர் கைது!

(எஸ்.கே.) திரு­மண விருந்து ஒன்றில் சந்­தித்த திரு­ம­ண­மான பெண் ஒரு­வரை புகைப்­ப­ட­மெ­டுத்த இளைஞர் ஒருவர் அந்த புகைப்­ப­டங்­களை பேஸ்­புக்கில் வெளி­யி­டு­வ­தாக அச்­சு­றுத்தி இரண்டு சந்­தர்ப்­பங்­களில் 24, 000 ரூபாவைப் பெற்றுக் கொண்ட நிலையில் மூன்­றா­வது முறை­யாக பணம் கேட்டு வந்­த­போது இளை­ஞரை பொலிஸார் கைது செய்த சம்­ப­வ­மொன்று பிய­கம மல்­வான பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. மல்­வான ரக்­ ஷபான பிர­தே­சத்தைச் சேர்ந்த 18 வய­தான திரு­ம­ண­மான இளம் பெண் திரு­மண விருந்­தொன்றில் கலந்து கொண்­டி­ருந்­த­போது அந்த இடத்­துக்கு வந்த […]

இந்திய வெளிவிவகார அமைச்சினால் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரல்: இறுதித் திகதி நவம்பர் 19

(வத்­து­காமம் நிருபர்) இலங்­கையில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ழி­யி­ன­ருக்கு குறு­கிய கால புலமைப் பரி­சில்­களை வழங்­கு­வ­தற்கு இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. விண்­ணப்பம் முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திக­தி­யாகும். இந்­தி­யாவை அறிந்­து­கொள்­ளுங்கள் என்ற வேலைத்­திட்­டத்தின் கீழ் இந்தப் புலமைப்பரி­சில்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இது 25 நாட்­களைக் கொண்ட குறு­கிய கால புல­மைப்­ப­ரி­சி­லாகும். பொரு­ளா­தாரம், கைத்­தொழில், கல்வி, விஞ்­ஞானம், தொழில்நுட்பம், தொடர்­பாடல், தகவல் தொழில் நுட்பம் முத­லான துறை­களில் இது அமைந்­துள்­ளது.  இந்­தியா அல்­லாத நாடு­களில் வசிக்கும் […]