ஒரு இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவை பாடசாலை மாணவர்களின் பைக்குள் வைத்து கடத்திய மதுவரி திணைக்கள அதிகாரி பொலிஸாரால் கைது

(புதிய காத்தான்குடி, காங்­கே­யனோடை நிரு­பர்கள்) ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஒரு கிலோ கேரளா கஞ்­சாவை கடத்­திய மது­வரி திணைக்­கள அதி­காரி ஒரு­வரை மட்­டக்­க­ளப்பு மாவட்ட மோசடி ஒழிப்பு பிரி­வினர் கைது செய்­துள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார். மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கீர்த்தி ரத்­னவின் பணிப்­பு­ரையின் பேரில் நேற்று முன்­தினம் 7.00 மணி­ய­ளவில் காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஆரை­யம்­பதி ஊர்­வீ­தியில் வைத்து மோட்டார் சைக்கிள் மூலம் பாட­சாலை பையினுள் வைத்து […]

பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய அமைச்சை பெற்றதால் வீடமைப்புத் திட்டத்துக்கான நிதி கிடைக்கிறது! – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன்

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்) பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு சேவை­யாற்­றக்­கூ­டிய அமைச்சை சாணக்­கி­யத்­துடன் பெற்­றுக்­கொண்­டதால் வீட­மைப்­புத்­ திட்­டத்­துக்­கான நிதி தொடர்ச்­சி­யாக கிடைத்து வரு­கின்­றது என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தேசிய அமைப்­பா­ளரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான சோ. ஸ்ரீதரன் தெரி­வித்­துள்ளார். வரவு–செலவுத் திட்டம் தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது முதல் மலை­யக மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி பணி­களை மேற்­கொள்ளும் வகையில் தனி­யான நிதி கடந்த மூன்று வரவு– செலவுத் […]

தோனியை விமர்சிப்பவர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் தோனியின் எதிர்­கா­லத்­திற்கு ஆது­ர­வாக இந்­திய கிரிக்கெட் அணியின் முகா­மைத்­துவம் குரல் கொடுத்­துள்­ளது. தோனியை இலக்கு வைப்­பது நியா­ய­மல்­ல­வென அணித் தலைவர் விராத் கோஹ்லி அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். தற்­போது இந்­திய அணி பயிற்­றுநர் ரவி சாஸ்­தி­ரியும் தோனிக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­துள்ளார். சிறந்த வீரர்கள் தங்­க­ளது எதிர்­கா­லங்­களைத் தாங்­க­ளா­கவே தீர்­மா­னிப்பர் என மஹேந்­திர சிங் தோனிக்கு ஆத­ர­வாக ரவி சாஸ்­திரி குறிப்­பிட்­டுள்ளார். நியு­ஸி­லாந்­துக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் […]

ஈரான் – ஈராக் எல்லையில் பூகம்பம்: 348 பேர் பலி; 6,500 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்­லை யில் நேற்று முன்­தினம் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தினால் குறைந்­தது 348 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­துள்­ளனர். 7.3 ரிச்டர் அளவில் பதிவான இந்த பூகம்­பத்­தின் இடி­பா­டு­களுக்குள் சிக்­கி­யவர்களை மீட்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக இரு நாடு­க­ளி­னதும் அரச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. சுமார் 70, 000 பேருக்கு புக­லி­டங்கள் தேவைப்­ப­டு­வ­தாக ஈரானின் உதவி நிறு­வனம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. ஈரானின் கேர்­மான்ஷா மாகா­ணத்தில் அதிகமானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் 6,300 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனைத் தொடர்ந்து […]

வெறு­மனே இரா­ஜாங்க அமைச்சர் பத­வியை வைத்துக் கொண்டு இலிகி­தரைப் போன்று செய­லாற்­று­வதால் எவ்­வித பய­னு­மில்லை! – கல்வி இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன்

(செங்­க­ட­கல நிருபர்) வெறு­மனே இரா­ஜாங்க அமைச்சர் பத­வியை வைத்துக் கொண்டு இலிகி­தரைப் போன்று செய­லாற்­று­வதால் மக்­க­ளுக்கு எவ்­வித சேவை­க­ளையும் புரிய முடி­யாது என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே. இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். சனிக்­கி­ழமை மாலை கண்டி இந்து கலா­சார மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஷெரீனின் அழ­கி­யற்­கலை தொடர்­பான வைபவம் ஒன்றில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்ட பின்னர் இரா­ஜாங்க கல்வி அமைச்சர் வே. இரா­தா­கி­ருஷ்ணன் ஊட­க­வி­ய­லாளர் மத்­தியில் கருத்து தெரி­விக்­கையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வி­த்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், அரசாங்­கத்­தி­லி­ருந்து […]