கிளி­நொச்சி சந்தை வர்த்­த­கர்கள் நிரந்­தரக் கட்­டடம் கோரி பேரணி

(கரைச்சி நிருபர்) கிளி­நொச்சி சந்தை வர்த்­தகர்கள் தங்­க­ளுக்கு நிரந்­தரக் கட்­டடம் ஒன்றை அமைத்துத் தரு­மாறு கோரி இன்று ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்றை நடத்­தினர். காலை பத்து மணிக்கு சந்தை வளா­கத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மான கண்­டனப் பேர­ணி­யினர் மாவட்டச் செய­லகம் வரை சென்று அங்கு அரச அதி­ப­ருக்கு தங்­களின் கோரிக்கை அடங்­கிய மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­துள்­ளனர்.

மது போதையில் பஸ் தரிப்பு நிலையத்தில் முறைகேடாக நடந்து கொண்ட தேரர் கைது

(மதுரங்குளி நிருபர், எஸ்.கே) மது போதையில் சிலாபம் பஸ் தரிப்பு நிலை­யத்தில் முறை­கே­டாக நடந்து கொண்ட பௌத்த தேரர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். இரவு நேர ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு குறித்த தேரர் தொடர்பில் தகவல் கிடைத்­ததைத் தொடர்ந்து பஸ் நிலையம் சென்ற பொலிஸார் அங்கு தகாத வார்த்­தை­களால் குறித்த தேரர் யாரையோ தூற்றிக் கொண்­டி­ருந்­த­தா­க­வும், அந்­நேரம் அவர் அதிக போதையில் இருந்­தமை தெரிய வந்­த­தோடு அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்­கு­ரிய […]

தோல்விக்குப் பயந்தே அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளதாக கூறுவதில் உண்மையில்லை – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தோல்­விக்குப் பயந்து அர­சாங்கம் தேர்­தல்­களைப் பிற்­போ­டு­வ­தாக எதி­ர­ணி­யினர் குற்­றம்­சாட்­டு­கின்­றனர். அவ்­வாறு அர­சாங்­கத்­துக்கோ ஜனா­தி­ப­திக்கோ தேர்­தலை நடத்­து­வதில் எந்த அச்­சமும் கிடை­யாது என புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார். இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகா­தார அமைச்சர் எம்.எஸ். சுபைர் ஆகி­யோ­ரது பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யொ­துக்­கீட்டில் ஏறா­வூரில் உள்ள சமூக நிறு­வ­னங்கள் மற்றும் விளை­யாட்டுக் கழ­கங்­க­ளுக்­கான பொருட்கள் கைய­ளிக்கும் நிகழ்வு திங்­கட்­கி­ழமை ஏறாவூர் நகர பிர­தேச செய­ல­கத்தில் […]

நடிகரான ரசூல் பூக்­குட்டி

ஸ்லம்டாக் மில்­லி­யனர் என்ற ஆங்­கில படத்­திற்கு, ஒலிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்றி, ஒஸ்கர் விருது பெற்­றவர் ரசூல் பூக்­குட்டி. தமிழில், ‘எந்­திரன்’, ‘கோச்­ச­டையான்’ மற்றும் ‘ரெமோ’ என, பல படங்­களில், ஒலிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்­றி­யுள்ள இவர், தற்­போது, ஒலிப்­ப­திவு கலை­ஞரை பற்றி உரு­வாகும், ‘ஒரு கதை சொல்­லட்­டுமா’ என்ற படத்தில், கதையின் நாய­க­னாக நடித்து வரு­கிறார். கண் பார்வை இல்­லா­த­வர்­க­ளுக்­காக தயா­ராகும் இப்­படம், தெலுங்கு, மலை­யாளம் மற்றும் இந்­தியில், தி சவுண்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளி­யாகவிருக்­கி­றது.

நாவ­லப்­பிட்டி ஹபு­கஸ்­த­லா­வயில் மேலு­மொரு மாணவன் பாலியல் துஷ்­பி­ர­யோகம்: கைதா­ன ஆசிரியர் விளக்­க­ம­றி­யலில்

(கம்­பளை நிருபர்) நாவ­லப்­பிட்டி ஹபு­கஸ்­த­லாவ பகு­தியில் 11 ஆம் தர மாண­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஆசி­ரியர் ஒரு­வரை கம்­பளை பொலிஸ் நிலைய சிறுவர் பாது­காப்பு பிரிவு பொலி­ஸாரின் வழி­காட்­ட­லுக்­க­மைய நாவ­லப்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இதன் போது பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் மாணவன் மருத்­துவ பரி­சோத­னைக்­காக வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கைது செய்­யப்­பட்ட நபரை நாவ­லப்­பிட்டி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜே­சே­கர முன்­னி­லையில் நேற்று ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு […]