ஹட்டன் செனன் கே.ஜி பிரிவு குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல்: 3 வீடுகள் பாதிப்பு

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன், க.கிஷாந்தன் ) ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடி­யி­ருப்பு ஒன்றில் காலை ஏற்­பட்ட திடீர் தீப்பரவல் கார­ண­மாக மூன்று வீடுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு வீடு­களைக் கொண்ட குறித்த லயன் குடி­யி­ருப்பில் ஒரு குடி­யி­ருப்பு முற்­றாக சேத­மா­ன­துடன், மேலும் இரண்டு வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­த­தா­கவும் பொலிஸார் கூறினர்.

விமர்சனத்துக்கு உள்ளான தீபிகாவின் ஆடை

நிகழ்ச்சி ஒன்­றுக்கு சேலை அணிந்து வந்த தீபிகா படு­கோ­னேவை சமூக வலை­த­ளங்­களில் நெட்­டிசன்ஸ் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். ெபாலிவூட் நடிகை தீபிகா படு­கோனே நிகழ்ச்சி ஒன்­றுக்கு டிசைனர் சேலை அணிந்து வந்தார். கறுப்பு நிறச் சேலைக்கு அவர் அணிந்­தி­ருந்த ஜாக்கெட் தான் குறைச்­ச­லாக இருந்­தது. தீபி­காவின் சேலை கெட்­டப்பை பார்த்த நெட்­டிசன்ஸ் அவரை விளாசித் தள்­ளி­யுள்­ளனர். இந்த ஜாக்­கெட்டை போடு­வ­தற்கு சும்­மாவே வந்­தி­ருக்­க­லாமே என்று கேட்­டுள்­ளனர். பெட்­மிண்டன் விளை­யாட்டில் இந்­தி­யா­வுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த பிரகாஷ் படு­கோ­னேவின் […]

வேறொரு இளைஞருடன் உறவில் ஈடுபட்ட கள்ளக்காதலியை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்

வேறொரு இளை­ஞ­ருடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட கள்­ளக்­கா­த­லியின் தலையில் அம்­மிக்­கல்லை போட்டு கொலை செய்த கள்­ளக்­கா­த­லனை சென்னை பல்­லா­வரம் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மேலும் இது குறித்து தெரி­வித்­துள்ள பொலிஸார், சென்­னையை அடுத்த ஜமீன் பல்­லா­வரம் அம்­பேத்கார் நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்­ண­ன் (வயது 38). சொந்த ஊர் பாண்­டிச்­சேரி. திருமணமாகி தந்தையான இவ­ருக்கு குழந்­தை­களும் உள்­ளனர். இவ­ருக்கு அதே பகு­தியை சேர்ந்த மற்றொருவரின் மனைவியான மல்­லிகா (வயது 38) என்­ப­வ­ருடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டது. […]

வவுனியாவில் தனிமையிலிருந்த 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம் குற்றவாளியாகக் காணப்பட்ட உறவினருக்கு 10 வருட கடூழியச் சிறை

(கதீஸ்) வவு­னியா – மற­வன்­கு­ளத்தில் 13 வய­தான சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நப­ருக்கு 20 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் உத்­த­ர­விட்டார். மற­வன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­தான நப­ருக்கே இந்த தண்­டனை வழங்­கப்­பட்­டது. கடந்த 2003ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசா­ர­ணைகள் வவு­னியா நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றன. பின்னர் கடந்த 2016.10.24 அன்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் […]

சிறையில் இருப்பதனால் பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது – சந்தேக நபர்; வழக்கு விசாரணைகளின்போது அமைதியாக இருக்க வேண்டும்!- நீதிவான்

(மயூரன்) புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்கின் நிர­ப­ராதியாக விடு­விக்­கப்­பட்ட நபர் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அச்­சு­றுத்­திய சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டுள்ளார். மாணவி கொலை வழக்கில் முத­லா­வது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் ஊர்­கா­வற்­துறை நீதி­மன்ற வளா­கத்­தினுள் வைத்து ஊர்­கா­வற்­துறை பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் ஒரு­வரின் பெயரை கூறி கொலை அச்­ச­றுத்தல் விடுத்­தி­ருந்தார். இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஊர்­கா­வற்­துறை பொலிஸார் ஊர்­கா­வற்­துறை நீதவான் நீதி­மன்றில் இந்த விவ­காரம் தொடர்பில் வழக்கு […]