ஹிருணிக்காவின் ஆதரவாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞரொருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 6 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ‍ இன்று விதிக்கப்பட்ட இந்த தண்டனை 12 வருடங்களுக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க உத்தரவிட்டார்.  அத்துடன் குற்றவாளிகளுக்கு 32 ஆயிரம் ரூபா அபராதமும், கடத்தப்பட்ட இளைஞனுக்கு 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நட்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

வளர்ப்பு நாய்கள் காணாமல் போன நிலையில் 10 அடி நீளமான மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) நாவ­லப்­பிட்­டி­பொலிஸ் பிரி­வுக்கு உக­பட்ட வெலி­கம்­பொல கிரா­மத்தில் பத்து அடி நீள­முள்ள மலைப்­பாம்மை பிர­தே­ச­வா­சிகள் பிட­டித்­துள்­ளனர் . மரக்­கறி தோட்ட விவ­சாயி ஒருவர் தனது தோட்­டத்தில் மர­வள்ளி கிழங்கு மரத்­துக்கு நீர் பாய்ச்­சு­வ­தற்கு நேற்றுக் காலை சென்ற போதே மரத்­த­டியில் மலைப்­பாம்பை கண்­டுள்ளார். மலை­பாம்பை கண்ட பிர­தேச வாசிகள் முதலில் அச்சம் கொண்ட நிலையில் பின்னர் அதனை பிடித்­துள்­ளனர். அண்­மைக்­கா­ல­மாக வளர்ப்பு நாய்கள் காணாமல் போன நிலை­யிலே இந்த மலைப்­பாம்பு பிடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர். […]

கொழும்பிலும் அண்மித்த பிரதேசங்களிலும் எட்டு பாலியல் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) கொழும்பின் இரு­வேறு பிர­தே­சங்­களில் நேற்று முன்­தினம் மேற்­கொள்­ளப்­பட்ட வெவ்­வேறு சுற்­றி­வ­ளைப்­பு­களின் போது 8 பாலியல் தொழிலாளர்கள் மற்றும் விப­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருந்த மூவர் உட்­பட 11 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார். கல்­கிஸை ரயில் நிலைய வீதியில் கல்­கிஸை பிராந்­தியக் குற்றப் பிரி­வினர் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்­பொன்றின் போது நட­மாடும் விப­சார சேவையில் ஈடு­பட்ட 5 பெண்­க­ளையும், அப்­ பெண்­களை நட­மாடும் விப­சார சேவையில் ஈடு­ப­டுத்­திய நப­ரொ­ரு­வ­ரையும் […]

2012 : பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை தீப்பற்றியதால் 112 பேர் பலி

வரலாற்றில் இன்று… நவம்பர் – 24   1642 : ஏபல் டாஸ்மேன் அவுஸ்திரேலியாவில் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இத்தீவுக்கு டாஸ்மேனியா என பின்னர் பெயரிடப்பட்டது. 1859 : சார்ள்ஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின. 1914 : இத்தாலிய சோசலிஸக் கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார். 1917 : அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற […]

இலங்கையில் ஆணுறைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதல் தடவையாக வீதிகளில் தானியங்கி விநியோக இயந்திரம்

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்) இலங்­கை­யில ஆணு­றை­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக முதல் தட­வை­யாக தானி­யங்கி இயந்­தி­ர­மொன்று வீதி ஓரத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக இலங்கை குடும்பத் திட்­ட­மிடல் சங்கம் தெரி­வித்­துள்­ளது. சில ஆண்­களும் பெண்­களும் பாம­ஸி­களில் சென்று ஆணு­றை­களை பெற்றுக் கொள்­வதை அசௌ­க­ரி­ய­மாக கருதும் கார­ணத்­தினால் இவ்­வாறு ஆணு­றை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆணுறை விநி­யோக தானி­யங்கி இயந்­திரம் (condom vending machine) பொருத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் பெரும்­பாலும் இலங்­கையில் ஏற்­ப­டக்­கூ­டிய பார­தூ­ர­மான பாலியல் நோய்கள், கருக்­க­லைப்­புகள், அநா­வ­சிய கருத்­த­ரிப்­புகள் என்­பன குறையக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. […]