கண­வரை எப்­போதும் என்­னுடனே வைத்­தி­ருப்­­­பேன் – சன்னி லியோன்

சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை என்று பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். நடிகை சன்னி லியோன் தற்போது நடிகர் அர்பாஸ் கானுடன் ‘தேரா இந்தேஜார்’ என்ற இந்திப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– என்னைப் பொறுத்தவரையில், சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை. இதற்காக கடவுளுக்கு நன்றி. இருந்தாலும், சினிமாவில் உள்ள […]

சங்கர் பாராட்­டிய ‘தீரன்’

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்­கத்தில் வெளி­யாகி இருக்கும் ‘தீரன் அதி­காரம் ஒன்று’ படத்தை இயக்­குநர் சங்கர் பாராட்­டி­யுள்ளார். கார்த்தி நடிப்பில் தற்­போது வெளி­யாகிருக்கும் படம் ‘தீரன் அதி­காரம் ஒன்று’. இப்­ப­டத்தை ‘சது­ரங்க வேட்டை’ வினோத் இயக்கி இருந்தார். கார்த்­திக்கு ஜோடி­யாக ரகுல் ப்ரீத் சிங் நடித்­தி­ருந்தார். ஜிப்ரான் இசை­ய­மைத்­தி­ருந்த இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்­ப­திவு செய்­தி­ருந்தார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறு­வனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயா­ரித்­தி­ருந்தார். இப்­ப­டத்தில் கார்த்தி ‘தீரன் திரு­மாறன்’ […]

கோப் தொலைபேசி உரையாடல்களைக் கண்டுபிடித்த சி.ஐ.டியினருக்கு அலரிமாளிகை தொடர்புகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வஸீம்) கோப் குழு உறுப்­பி­னர்­களின் தொலை­பேசி உரை­யா­டலை கண்­டு­பி­டிக்க முடி­யு­மான குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தாஜுதீன் கொலை­செய்­யப்­பட்ட தினம் அல­ரி­மா­ளி­கை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட தொலை­பேசி உரை­யா­டல்­களை இன்னும் கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போயுள்­ளது என கொழும்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்சி கொலன்­னாவ அர­சியல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்­தினம் மாலை கொலன்­னாவ மங்­க­ல­பாய கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி கொலன்­னாவ தொகுதி அமைப்­பா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ். எம்.மரிக்கார் தலை­மையில் […]

9 அடி உய­ர­மான இரண்டு கஞ்சா செடிகள் சிக்­கின!

(வத்­து­காமம் நிருபர்) கண்டி மாவில்­மடை பிர­தே­சத்தில் ஹோட்டல் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இடம் ஒன்றில் ஒன்­பது அடி உய­ர­முள்ள இரண்டு கஞ்சா செடிகள் வளர்க்­கப்­பட்டு வந்த நிலையில் பொலிஸார் நேற்று அவற்றைக் கைப்­பற்­றினர். பொலிஸ் அவ­சரப் பிரி­வுக்குக் கிடைத்த தகவல் ஒன்­றின்­படி குறித்த இடத்தை பரி­சோ­தித்த பொலிஸார் அங்கு ஹோட்டல் கட்­டிடம் ஒன்று கட்­டப்­பட்டு வந்த நிலையில் அந்த வளா­கத்தில் ஒன்­பது அடி உய­ர­முள்ள இரு கஞ்சா செடிகள் வளர்க்­கப்­பட்­டி­ருந்­ததை கண்­டு­பி­டித்­தனர். இது தொடர்பில் சந்­தேக நபர் […]

மரண வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்களின் ஆட்டோ மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து இருவர் காயம்!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர், க.கிஷாந்தன்) தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மேல்­கொத்­மலை நீர்­தேக்­கத்தில் முச்­சக்­க­ர­வண்டி வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் இருவர் படு­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். ஹொலிரூட் பகு­தி­யி­லி­ருந்து தல­வாக்­கலை நோக்கிச் சென்ற முச்­சக்­க­ர­வண்டி ஒன்று நேற்று இர­­வு 9 மணி­ளவில் பூண்­டு­லோயா தல­வாக்­கலை பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 அடி பள்­ளத்தில் பாய்ந்து கொத்­மலை ஆற்றில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தாக தல­வாக்­கலை பொலிஸார் தெரி­வித்­தனர். கண்டி வத்­தே­கம பிர­தே­சத்­தி­லி­ருந்து ஹெலிரூட் பகு­திக்கு மரண வீடு ஒன்­றுக்குச் சென்­ற­வர்­களே விபத்தில் சிக்­கினர். விபத்தில் […]