மோட்டார் சைக்கிளை பஸ் மோதி 30 வயதான ஆசிரியர் உயிரிழந்தார்!

தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தல­வாக்­கலை–பூண்­டு­லோயா பிர­தான வீதியில் வட்­டக்­கொடை கீழ்ப்­பி­ரிவு தோட்ட அரு­கா­மையில் இடம்­பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார். இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் பு­ஸல்­லாவ நவ­க­ட­துர பகு­தியைச் சேர்ந்­த­வரும் சிங்­கள பாட­சாலை ஒன்றின் ஆசி­ரி­ய­ரு­மான 30 வய­தான நப­ராவார். குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்­கிளில் புஸல்­லாவ பகு­தி­யி­லி­ருந்து தல­வாக்­கலை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த போது தல­வாக்­க­லை­யி­லி­ருந்து பூண்­டு­லோயா நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த பஸ் ஒன்­றினால் மோதுண்டு உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜஸ்டிஸ் லீக்கை முந்திய கோகோ

டிஸ்னி – பிக்ஸார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த அனிமேஷன் படமான கோகோ அண்மையில் வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தை முந்தி வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. வோல்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஆகியன நிறுவனங்கள் இணை தயாரிப்பில் வெளியாகியிருக்கும் முப்பரிமாண (3டி) அனிமேஷன் படம் கோகோ. அமெரிக்காவில் கடந்த 22 ஆம் திகதி இப்படம் ெவளியானது. அதிக நேர்மறை விமர்சனங்களுடன், பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை கோகோ பெற்றது. அதனால் முதல் […]

பெக் ஸ்ட்ரீட் போய்ஸ் பாடகர் நிக் கார்ட்டர் மீது பாடகி மெலிஸா பாலியல் குற்றச்சாட்டு

பெக் ஸ்ட்ரீட் போய்ஸ் எனும் பிர­பல அமெ­ரிக்க இசைக்­கு­ழுவைச் சேர்ந்த பாட­கர்­களில் ஒரு­வரும் நடி­க­ரு­மான நிக் கார்ட்டர் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக பாடகி மெலிஸா சூமென் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.   ஆனால், இக்­குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை எனக் கூறும் பாடகர் நிக் கார்ட்டர், இக்­குற்­றச்­சாட்டு கார­ண­மாக தான் மிகவும் கலை­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். திரைப்­பட மற்றும் இசைத்­து­றை­யி­லுள்ள பிர­ப­லங்கள் மீது அண்­மைக்­கா­ல­மாக பெண்கள் பலர் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­வரும் நிலையில், நிக் கார்ட்டர் மீது பாடகி மெலிஸா குற்றம் சுமத்­தி­யுள்ளார். […]