சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது!

(க.கிஷாந்தன்) சிவ­னொ­ளி­பா­த­மலை பரு­வ­காலம் ஆரம்­பித்­துள்ள நிலையில் , 7550 மில்­லி­கிராம் கஞ்சா போதைப் பொருளை அங்­கு­கொண்டு சென்ற நால்­வரை நோர்ட்­டன்­பிரிஜ் திய­கல பிர­தே­சங்­களில் ஹட்டன் கலால் திணைக்­கள அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர். மத்­திய மாகாண கலால் திணைக்­கள ஆணை­யாளர் காமினி அதி­காரி, நுவ­ரெ­லியா கலால் திணைக்­கள அதி­காரி உபுல் சென­வி­ரத்ன, ஹட்டன் கலால் திணைக்­கள அதி­காரி திலக்­ரத்ன ஆகி­யோரின் வழி காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போதே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

லிந்துலை லோகி தோட்டக் காணியில் தனியார் கடை: எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன், நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர், தலவாக்கலை கேதீஸ்) லிந்­துலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட லோகி தோட்டத் தொழி­லா­ளர்கள் தல­வாக்­கலை _- நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் லோகி தோட்­டத்­துக்கு அண்­மித்த பகு­தியில் இன்­று ஆர்ப்­பாட்டம் ஒன்றில் ஈடு­பட்­டுள்­ளனர். நபர் ஒருவர் லோகி தோட்­டத்­துக்குச் சொந்­த­மான காணியை ஆக்­கி­ர­மித்து கடை ஒன்றை அமைத்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டியே இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இவ்­வாறு அமைக்­கப்­பட்ட கடையில் மரக்­க­றிகள் விற்­பனை செய்­வ­தற்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தற்­கா­லி­க­மாக அனு­ம­தியை இவர் பெற்­றி­ருந்­துள்ள போதிலும் […]

பாலி­யல் தொழி­லா­ளி­யாக சதா

அப்துல் மஜீத் இயக்­கத்தில் சதாவின் மாறு­பட்ட தோற்­றத்தில் உரு­வாகும் ‘டார்ச்லைட்’ படத்தின் பெர்ஸ்ட் லுக் சமீ­பத்தில் வெளி­யி­டப்­பட்­டது. விஜய், பிரி­யங்கா சோப்ரா நடிப்பில் உரு­வான ‘தமிழன்’ படத்தை இயக்­கி­யவர் அப்துல் மஜீத். அதற்குப் பிறகு ‘கி.மு’, ‘துணிச்சல்’, ‘பைசா’, ‘தலகால் புரி­யல’ ஆகிய படங்­களை இயக்­கினார். தற்­போது சதா நடிப்பில் உரு­வாகும் ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கி வரு­கிறார். இதில் ரித்­விகா, இயக்­குநர் ஏ.வெங்­கடேஷ் ஆகியோர் முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­றனர். இந்­நி­லையில் ‘டார்ச்லைட்’ படத்தின் பெர்ஸ்ட் லுக் சமீ­பத்தில் […]

தேர்தல்களில் பெண்களுக்கு 25 சத வீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பெருந்தோட்டத்துறை பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும்! – ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன்

(எம். செல்­வ­ராஜா) தேர்­தல்­களில் பெண்­க­ளுக்கு 25 சத வீத பிர­தி­நி­தித்­துவ ஒதுக்­கீடு விட­யத்தில், மலை­யகப் பெருந்­தோட்­டத்­துறை சார் பெண்­களும் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று ஊவா மாகாண சபை உறுப்­பினர் எம். சச்­சி­ தா­னந்தன் தெரி­வித்தார். ஊவா மாகாண சபை கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில், ஊவா மாகாண சபை உறுப்­பினர் எம். சச்­சி­தா­னந்தன் கலந்து கொண்டு பேசு­கை­யி­லேயே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில், தேர்­தல்கள் எது­வென்­றாலும் அத்­தேர்­தல்­களில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத […]

மூன்று மைல்­கற்­களை எட்­டினார் விராத் கோஹ்லி

இலங்­கைக்கு எதி­ராக டெல்லி பெரோஸ் கோட்லா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் விராத் கோஹ்லி மூன்று மைல்­கற்­களை எட்டி பாராட்­டு­தல்­களைப் பெற்றார். அவ­ரது இரட்டைச் சதம், முரளி விஜய்யின் சதம், ரோஹித் ஷர்­மாவின் அரைச் சதம் ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் இந்­தியா அதன் முதல் இன்­னிங்ஸை 7 விக்கெட் இழப்­புக்கு 536 ஓட்­டங்­க­ளுடன் நிறுத்­திக்­கொண்­டது. போட்­டியின் இரண்டாம் நாளான நேற்­றைய ஆட்­ட­நேர முடிவில் இலங்கை அதன் முதல் இன்­னிங்ஸில் 3 விக்­கெட்­களை இழந்து 131 […]