1995 : யாழ்ப்­பா­ணத்தை இலங்கை அரச படைகள் கைப்­பற்­றின

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 05   1360 : பிரெஞ்சு நாண­ய­மான பிராங்க் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 1492 : கிறிஸ்­டோபர் கொலம்பஸ், ஹிஸ்­ப­னி­யோலா தீவை (தற்­போ­தைய ஹெய்ட்டி, டொமி­னிக்கன் குடி­ய­ரசு) அடைந்தார். 1497 : போர்த்­துக்­கல்லின் மன்னன் முதலாம் மனுவேல், யூதர்கள் அனை­வரும் கிறிஸ்­த­வத்­துக்கு மதம் மாறு­மாறும் அல்­லது நாட்டை விட்டு வெளி­யே­று­மாறும் பணித்தான். 1746 : ஸ்பானிய ஆட்­சிக்­கெ­தி­ராக ஜெனோ­வாவில் கிளர்ச்சி ஆரம்­ப­மா­னது. 1831 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் குயின்ஸி அடம்ஸ், நாடா­ளு­மன்ற […]

நீர்கொழும்பிலிருந்து படகில் கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்களைக் காணவில்லை! 16 ஆம் திகதி சென்ற இவர்களுடனான தொடர்பு 29 ஆம் திகதியுடன் முற்றாக துண்டிப்பு!

(நீர்­கொ­ழும்பு நிருபர்) நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் கட­லுக்குச் சென்ற மீன­வர்கள் நான்கு பேர் கடந்த 29 ஆம் திகதி ஆள் கடலில் படகு விபத்­துக்­குள்­ளாகி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. ‘செனுரி துவ – தருசி புதா’ என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீன­வர்கள் நால்­வரே காணாமல் போயுள்­ளனர்.   கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து ‘செனுரி துவ – தருசி புதா’ என்ற படகில் காணாமல் போயுள்ள மீன­வர்கள் தொழி­லுக்கு சென்­றுள்­ளனர். கடந்த […]

பொலிஸ் எனக் கூறி வெள்ளை வேனில் வந்த நபரால் சிறுமி கடத்­தப்­பட்டு துஷ்­பி­ர­யோகம்!

(ரெ.கிறிஷ்­ணகாந்) மாத்தறை, திக்­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 11 வய­தான சிறுமி ஒரு­வரை கடத்திச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி, அவ­ரி­ட­மி­ருந்து தங்கச் சங்­கி­லியை அப­க­ரித்துச் சென்­ற­தாக கூறப்­படும் சந்­தேக நபர் ஒரு­வரை திக்­வெல்ல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இச்­சி­றுமி, கடந்த சனிக்­கி­ழமை பிரத்­தி­யேக வகுப்­புக்கு சென்று கொண்­டி­ருக்­கையில், திக்­வெல்ல நக­ருக்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த சந்­தேக நபர், தான் ஒரு பொலிஸ் அதி­காரி எனக் கூறி சிறு­மியை அச்­சு­றுத்தி வேனில் ஏற்றிக் கொண்டு வெவு­ரு­கன்­னல பிர­தே­சத்­துக்கு […]

கிழக்கு முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீரும், அலி சாஹீர் எம்.பியும் முறுகல்; சமா­தா­னப்­ப­டுத்தும் முயற்சி தோல்வி: கூட்­டத்தை விட்டு வெளி­யே­றிய அலி சாஹீர்!- முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் முன்­னி­லையில் பாசிக்­குடா ஹோட்­டலில் சம்­பவம்

(காங்­கே­ய­னோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு, பாசிக்­குடா ஹோட்­டலில் வைத்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­கி­டையில் பலத்த வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இந்த வாக்­கு­வாதம் கைக­லப்­பாக மாறும் நிலை ஏற்­பட்ட போது அங்­கி­ருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் இரு­வ­ரையும் சமா­தா­னப் ­ப­டுத்­தி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக தெரிய வரு­வ­தா­வது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை ­வரும் […]

செத்­சி­றி­பா­யவின் 13 ஆவது மாடி­யி­லி­ருந்து கீழே வீழ்ந்த தொழில்­நுட்ப நிபுணர் உயி­ரி­ழப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்) பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள கட்­ட­ட­மொன்றின் 13 ஆவது மாடி­யி­லி­ருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அரசின் கீழ் இயங்கும் அநே­க­மான திணைக்­க­ளங்­களை கொண்­டுள்ள செத்­சி­றி­பாய கட்­டடத் தொகு­தியின் 13 ஆவது மாடி­யி­லி­ருந்து வீழ்ந்தே நேற்­றைய தினம் இந்­நபர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். தனியார் நிறு­வனம் ஒன்றில் தொழில்­நுட்ப நிபு­ண­ராக கட­மை­யாற்­றி­வந்த, மாகொல பிர­தே­சத்தைச் சேர்ந்த 21 வய­தான இளை­ஞரே இவ்­வாறு தவறி வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இவர் இக்­கட்­ட­டத்தில், ஏற்­பட்­டி­ருந்த தொழில்­நுட்ப கோளாறை […]