இந்தியாவின் வெற்றியை தனஞ்செய,ரொஷேன் தடுத்தனர்; 3 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா விளை­யாட்­ட­ரங்கில் மிகவும் இக்­கட்­டான நிலையில் பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தாடி தனஞ்­செய டி சில்வா பெற்ற சதமும் அறி­முக வீரர் ரொஷேன் சில்வா பெற்ற அரைச் சதமும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியை இலங்கை வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொள்ள உத­வின. எவ்­வா­றா­யினும் மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் 2ஆவது டெஸ்டில் வெற்­றி­பெற்ற இந்­தியா தொடரை 1 க்கு 0 என தன­தாக்­கிக்­கொண்­டது. லஹிரு திரி­மான்­ன­வுக்குப் பதி­லாக இந்தத் தொடரில் முதல் தட­வை­யாக விளை­யா­டிய […]

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாமாவையும் மருமகனையும் காட்டு யானை தாக்கியதில் காயம்

திரு­கோ­ண­மலை மஹ­தி­வுல்­வெவ பகு­தியில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த மாமா­வையும் மரு­ம­க­னையும் காட்டு யானை தாக்­கி­யதில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் இன்­று காலை அனு­ம­திக்­கப்­பட்­டனர். மஹ­தி­வுல்­வெவ விகா­ர­கம பகு­தியில் சேனைப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்­டு­வரும் இவர்கள் வீட்­டுக்கு திரும்பிக் கொண்­டி­ருந்த போதே வழியில் யானை தாக்­கி­ய­தா­கவும் மஹ­தி­வுல்­வெவ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மேல­திக சிகிச்­சைக்­காக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

என்னை பொறுத்­த­வரை கதை தான் முக்­கியம் – ரம்யா நம்­பீசன்

என்னை பொறுத்­த­வரை புது­மு­க­மாக இருந்­தாலும் கதை தான் முக்­கியம் என்று ரம்யா நம்­பீசன் தெரி­வித்­தி­ருக்­கிறார். ப்ரதீப் கிருஷ்­ண­மூர்த்தி இயக்­கத்தில் சிபிராஜ், ரம்யா நம்­பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் நடிப்பில் உரு­வாகியிருக்கும் படம் ‘சத்யா’. சைமன் கிங் இசை­ய­மைப்­பா­ள­ரா­கவும், அருண்­மணி ஒளிப்­ப­தி­வா­ள­ரா­கவும் பணி­பு­ரிந்­தி­ருக்­கி­றார்கள். சத்­யராஜ் தயா­ரித்­தி­ருக்­கிறார். ‘சத்யா’ குறித்து ரம்யா நம்­பீசன் பேசி­யி­ருப்­ப­தா­வது: நான் எப்­போ­துமே நல்ல கதை­களை மட்­டுமே நம்­புவேன். ‘சத்யா’ படத்தைப் பொறுத்­த­வரை என் கதா­பாத்­தி­ரத்தின் பெயர் ஸ்வேதா. ’சத்யா’ தெலுங்கில் பெரும் வர­வேற்பைப் பெற்ற […]

திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

(தோப்பூர் நிருபர்) திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பட்டதாரிகள் கிண்ணியா பஸ் நிலையத்தின் முன்பாக இன்­று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் தலா 40 க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்து நேர் முகப்பரீட்சைக்கு தோற்றியும் தமக்கு நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்காதல் வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்!

தமிழகத்தின் மதுரை பகுதியில் தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி தண்டனை கொடுத்துள்ளார். அவர் மீது தமிழகத்தின் மதுரை பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள பொலிஸார், மதுரை நேரு நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் மனைவி மற்றும் 3 பிள்ளைளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பரமேஸ்வரனுக்கு விரட்டிப்பத்து பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]