கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்த சந்தி வரையான – அளுத்மாவத்தை வீதி இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பாதையில் அமைந்து பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவின் காரணமாக இன்று இரவு 9 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாரதிகளை மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
Day: December 15, 2017
பரீட்சை மண்டபத்தில் ஆள்மாறாட்டம்; இருவர் கைது
க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த இருவரை லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலையிலுள்ள பாடசாலையொன்றில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையமொன்றின் 2 ஆம் இலக்க பரீட்சை மண்டபத்தில், ஒரே தடவையில் பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகள் இருவர், தத்தமது பரீட்சை அனுமதிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை ஒருவருக்கொருவர் (பரி) மாற்றிக் கொண்டு பரீட்சை எழுதுவதற்கு தயாராகியுள்ளமை, பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டபோது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பரீட்சை மண்டப பிரதானியின் […]
களுபோவில தீ விபத்தில் பெண் பலி
தெஹிவளை – களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வீட்டின் மேல் மாடியில் நேற்றிரவு இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது அவ்வீட்டிலிருந்த 57 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவராத அதேவேளை, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2010 : கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் படகு உடைந்ததால் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் பலி
வரலாற்றில் இன்று…. டிசம்பர் – 15 1256 : மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட்டினால் (தற்போதைய ஈரானில்) எனும் இடம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. 1891 : கூடைப்பந்தாட்ட விளையாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் அறிமுகப்படுத்தினார். 1905 : அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது. 1914 : முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் தலைநகர் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது. 1914 : ஜப்பானில் […]
இளைஞரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதிகள்
இளைஞர் ஒருவரை இரு பெண்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று தென் ஆபிரிக்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயதான மேற்படி இளைஞர், பொலோக்வான் எனும் நகரில் கடந்த சனிக்கிழமை காலை வீதியில் செல்லும் வாகன சாரதிகளிடம் தன்னை ஏற்றிச்செல்லுமாறு கோரிக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்றில் வந்த இரு பெண்கள் மேற்படி இளைஞரை ஏற்றிச் சென்றனர். ஆனால், அவர்கள் மேற்படி இளைஞரிடம் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மகோபாஸ்க்லூவ் எனும் இடத்தில் […]