வவுனியாவில் கல்வியற்கல்லூரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(கதீஸ்) வவு­னி­யாவில் ஈரப்­பெ­ரி­ய­குளம் பகு­தியில் இன்­று அதி­காலை இடம்­பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஈரப்­பெ­ரி­ய­குளம் பொலிஸார் தெரி­வித்­தனர். இவ் விபத்துச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­கையில், கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கிச் சென்ற கல்­வி­யற்­கல்­லூ­ரிக்கு சொந்­த­மான வாகனம் ஈரப்­பெ­ரி­ய­குளம் பகு­தியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னது. பலத்த காய­ம­டைந்த 46 வய­தான நப­ரை­ வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து செல்லும் போது உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். மேல­திக விசா­ர­ணை­களை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரப்பத்தனை கொலை தொடர்பில் சந்தேகத்தில் இரு உறவினர்கள் கைது!

(க.கிஷாந்தன்) நுவ­ரெ­லியா – அக்­க­ரப்­பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் தடியால் தாக்­கப்­பட்டு நபர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். தாக்­கு­த­லுக்கு இலக்­கான நபர் பலத்த காயங்­க­ளுடன் அக்­க­ரப்­பத்­தனை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அக்­க­ரப்­பத்­தனை ஊட்­டு­வள்ளி தோட்டம் உட்லெக் பிரிவில் குடும்­பத்தில் ஏற்­பட்ட தக­ராறு கைக­லப்­பாக மாறி­யதில் சந்­தேக நபர்­க­ளான இருவர் குறித்த நபரை தடியால் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தக் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளான உயி­ரி­ழந்த நபரின் உற­வி­னர்­க­ளான […]

ஆடம்பர பெராரி காரை திருடிச் சென்ற நபர் பெற்றோலுக்கு பிச்சையெடுத்த நிலையில் கைது

பெராரி ரகத்தைச் சேர்ந்த ஆடம்­பர கா­ரொன்றை திருடிச் சென்ற நபர் ஒருவர், அக்­கா­ருக்குப் பெற்றோல் நிரப்­பு­வ­தற்குப் பண­மில்­லாமல் பிச்­சை­யெ­டுத்த நிலையில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. 38 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக கலி­போர்­னியா மாநி­லத்தின் சான்ட்ட அனா நகரைச் சேர்ந்த பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி நபர், 2015 ஆம் ஆண்டின் 458 ஸ்பைடர் ரக பெராரி காரொன்றை வாக­னங்­களை பழு­து­பார்க்கும் நிலை­ய­மொன்­றி­லி­ருந்து திருடிச் சென்­றி­ருந்தார். இரு வாரங்­களின் பின், மேற்­படி வாக­னத்­துக்கு […]

ஆரம்ப காலத்தில் தனக்கு உதவிய 14 நண்பர்களுக்கு தலா 15 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய ஜோர்ஜ் குளூனி

ஹொலிவூட் நடி­கரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான ஜோர்ஜ் குளூனி தனது நெருங்­கிய நண்­பர்கள் 14 பேருக்கு தலா 10 லட்சம் டொலர் (சுமார் 15 கோடி ரூபா) பணத்தை அன்­ப­ளிப்­பாக வழங்­கி­ய­தாக அவரின் நண்பர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். நடிகர், தயா­ரிப்­பாளர், இயக்­குநர், திரைக்­கதை எழுத்­தாளர், வர்த்­தகர் என பல முகங்­களைக் கொண்­டவர் 56 வய­தான ஜோர்ஜ் குளூனி. நன்றி மறக்­காத குணம் கொண்ட அவர், ஹொலிவூட் படங்­களில் நடிப்­ப­தற்­காக லொஸ் ஏஞ்­சல்­ஸுக்கு வந்த புதிதில் தனக்கு உதவி நண்­பர்­க­ளுக்கு 10 […]

நவீன உலகின் பிரபலங்களின் சாயலில் நட்சத்திரக்கூட்டங்களின் படங்கள் வெளியீடு

பிர­பஞ்­சத்­தி­லுள்ள நட்­சத்­திரக் கூட்­டங்கள் தொடர்­பாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு கற்­பிப்­ப­தற்­காக நவீன உலகின் பிர­ப­லங்கள் மற்றும் பிர­சித்தி பெற்ற பொருட்­களின் தோற்றம் கொண்ட நட்­சத்­திரக் கூட்­டங்கள் அடங்­கிய படங்­களை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வெளியிட்­டுள்­ளனர். பேர்மிங் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற விஞ்­ஞானக் கல்விக் கண்­காட்­சி­யொன்றில் மேற்­படி 8 புதிய ஓவி­யங்கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன. குறுந்­தூர ஓட்­டத்தில் உலக சாத­னை­யா­ள­ராகத் திகழும் ஜமெய்க்கா வீரர் ஹூசைன் போல்ட், அமெ­ரிக்க டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ், ஹரி­பொட்டர் கதா­பாத்­திர உரு­வங்­க­ளிலும் நட்­சத்­தி­ரக்­கூட்­டங்­களின் படங்கள் வரை­யப்­பட்­டுள்­ளன. […]