கல்வி அமைச்சின் வளங்களில் மலையக பாடசாலைகளில் முறைகேடுகள்; விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவர் – கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

(நுவ­ரெ­லியா கண்ணன்) ”கல்வி அமைச்சின் மூல­மாக அண்­மையில் பாட­சா­லை­க­ளுக்கு வாசி­க­சா­லை­க­ளுக்­கான புத்­த­கங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இல­வச சீரு­டை­களும் வழங்­கப்­பட்­டன. ஒரு சில அதி­பர்கள் மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக எனக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அவ்­வா­றான அதி­பர்கள் உரிய முறையில் இனம் காணப்­பட்டால் அவர்­களை பதவி நீக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என கல்வி இரா­ஜாங்க அமைச்­சரும் மலை­யக மக்கள் முன்ன­ணியின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வ­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார். […]

கறுப்புநிற ஆடையில் நீதி­மன்றில் ஆஜ­ரா­ன­வரை பொலிஸார் மூலம் வெளி­யேற்­றிய யாழ். நீதிவான்!

(ரெ.கிறிஷ்­ண­காந்­, ­ம­யூரன்) கறுப்பு நிற ஆடையில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த ஐயப்ப பக்தர் ஒரு­வரை எச்­ச­ரித்த யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சி.சதீஸ்­த­ரன், நீதி­மன்ற கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ். நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­று­வரும் வழக்­கு ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கா­க, இந்­நபர் சாட்­சி­யா­ள­ராக ஆஜ­ரா­கி­யுள்ளார். நீதி­மன்றில் ஆஜ­ரா­வ­தற்­கென மத­கு­ரு­மா­ருக்கு உரிய ஆடை­க­ளும், சாதா­ரண நபர்­க­ளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தைக் கொண்ட பொருத்­த­மான ஆடை­களை மாத்­திரம் அணி­வ­தற்கு அனு­ம­தி­யுள்­ளது. எனினும், மத­கு­ரு­வாக கருத முடி­யாத இந்­நபர் நீதி­மன்­றுக்கு […]

அருள்­வாக்கு கூறு­ப­வ­ரினால் பூஜையின்போது சுட்­டிக்­காட்­டப்­பட்ட கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட கற்­கு­கையில் பழை­மை­வாய்ந்த நாக­லிங்கச் சிலை மீட்­கப்­பட்­டது

(கம்­பளை நிருபர்) கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றுக்­கு­ள்ளி­ருந்து பழை­மை­வாய்ந்த நாக­லிங்கச் சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அருள்­வாக்குக் கூறும் ஒரு­வரின் தக­வலின் அடிப்­ப­டையில் மீட்­கப்­பட்ட குறித்த சிலையை பார்­வை­யி­டு­வதற்­காக மக்கள் கூட்­ட­மாக வந்­த­வண்­ண­முள்­ளனர்.  மேற்­படி தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் உள்ள கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிகழ்வு இடம் பெற்­றுள்­ளது. […]

1935 : இலங்கையின் முதல் அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 18   1271 : குப்லாய் கான் தனது சீனப் பேர­ரசின் பெயரை ‘யுவான்’ என மாற்றிக் கொண்டான். சீனா, மொங்­கோ­லி­யாவில் யுவான் வம்சம் ஆரம்­ப­மா­னது. 1505 : பெல்­ஜிய மன்னன் ஜோன் யுவான் ஹோர்ன் தூக்­கி­லி­டப்­பட்டார். 1642 : ஏபெல் டாஸ்மான் நியூ­ஸி­லாந்தில் காலடி பதித்த முத­லா­வது ஐரோப்­பி­ய­ரானார். 1878 : கத்­தாரில் அல் தானி குடும்பம் ஆட்­சிக்கு வந்­தது. 1911 : சேர் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் இலங்­கையின் சட்­ட­ச­பைக்கு […]

‘ரோயல் வெடிங் 2017’: 50 சீன ஜோடி­க­ளுக்கு கொழும்பில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம்

சீனாவை சேர்ந்த 50 ஜோடிகள் நேற்று கொழும்பில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். கொழும்பு நகரசபை மைதானத்தில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. இலங்கையின் கலாசாரம் தொடர்பில் மீண்டும் உறுதிப்படுத்தவும் நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘ரோயல் வெடிங் 2017’ என்ற இந்த திட்டத்தின் கீழ் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   (ஜே.சுஜீவகுமார்)