தந்­திாி­ம­லையில் யானைத் தந்­த­ங்­க­ளுடன் இருவர் கைது

அநுராதரம் தந்திரிமலை பிரதேசத்தில் இரு யானைத் தந்தங்களுடன் இருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்ள் சுமார் 4 அடி நீளமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களுக்கு எவ்வாறு குறித்த யானைத்தந்தங்கள் கிடைத்தன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார்

  பெண்­களை இரண்­டாந்­தர உயி­ரி­னங்கள் போன்று சவூதி அரே­பியா கரு­து­வதால் அங்கு நடை­பெ­ற­வுள்ள செஸ் உலக சம்­பியன் போட்­டி­களில் பங்­கு­பற்­றப்­போ­வ­தில்லை என இரண்டு தட­வைகள் உலக செஸ் சம்­பி­ய­னான யூக்ரெய்ன் வீராங்­கனை அனா முஸிசுக் தெரி­வித்­துள்ளார். ‘எனது கொள்­கை­களை நான் கடைப்­பி­டிக்­க­வுள்ளேன்” எனத் தெரி­வித்த அவர், சவூ­தியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்­துவம் பேணப்­ப­டா­ததால் இரட்டை உலக சம்­பியன் பட்­டங்­களைத் தக்­க­வைக்­கப்­போ­வ­தில்லை என்றார். வீதி­களில் தனி­யா­கக்­கூட நடந்து செல்ல அனு­ம­திக்­கப்­பட மாட்டார் என்­ப­தாலும் சவூதி அரே­பி­யா­வுக்கு […]

2017 இல் தலா ஒரு படத்தில் மட்­டும் நடித்த ஹீரோக்­கள்

2017… நிறைய புது­முக இயக்­கு­நர்­க­ளுக்கு நல்ல வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். கோலி­வூட்டில் கால் பதித்­தி­ருக்கும் புது­முக நடி­கர்­க­ளுக்கும் சிறந்த வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். அதே­ச­மயம், சூப்பர் ஸ்டாரினதும் உலக நாய­க­னதும் படங்கள் இந்த வருடம் வெளியாகவில்லை என்­றாலும் அர­சியல் பிர­வே­சத்தால் மக்­க­ளிடம் தொடர்­பி­லேயே இருந்­தனர். ஆனால், இந்த வருடம் பெரும்­பா­லான ஹீரோக்­க­ளுக்கு ஒரே ஒரு படம்தான் வெளி­யாகி உள்­ளது. அந்த ஹீரோக்­களின் பட்­டியல் இதோ… அஜித்குமார் : – சிவா இயக்­கத்தில் அஜித் நடித்த படம் ‘விவேகம்’. இதே கூட்­ட­ணியில் […]

அதிவேக நெடுஞ்சாலையில் ஹசீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

ஹசீஸ் போதைப்பொருளுடன் காரொன்றில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மூவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியிலிருந்து கடவத்தை நோக்கி பயணித்த காரொன்றை நேற்றிரவு 10 மணியளவில் கடவத்தை வெளியேறும் வாயிலில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்போது குறித்த காரிலிருந்து 840 கிராமும் 300 மில்லிகிராமும் நிறைக்கொண்ட ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த மூவர் போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டனர். […]

7 மாதங்களாக இந்து சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு

போலந்தைச் சேர்ந்த ஒருவர் 7 மாதங்கள் இந்து சமுத்­தி­ரத்தில் தத்­த­ளித்த நிலையில் பிரெஞ்சு கரை­யோரக்  காவல் படை­யி­னரால் கடந்த திங்­கட்­கி­ழமை மீட்­கப்­பட்­டுள்­ளா­ரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிக்னிவ் ரெகெட் எனும் இந் ­நபர் கூறும் தகவல் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால், நீண்ட காலம் கடலில் தத்­த­ளித்­த­மைக்­கான களைப்­புடன் அவர் காணப்­ப­டு­கிறார். 54 வய­தான ரெகெட், அமெ­ரிக்­காவில் வசித்­தவர். 2014 ஆம் ஆண்டு பட­கொன்றை வாங்­கு­வ­தற்­காக இந்­தி­யா­வு க்குச் சென்றார். ஆனால், தனது வீசா காலா­வ­தி­யா­கி­விட்­டதால் அவரால் மீண்டும் அமெ­ரிக்­கா­வுக்குத் திரும்ப முடி­ய­வில்லை. […]