திரு­மண விளம்­ப­ரங்கள் ஊடாக தொடர்பைப் பேணி பெண்­களின் தங்க நகை­களை மோசடி செய்­தவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) பத்­தி­ரி­கை­களில் வெளி­யாகும் திரு­மண விளம்­ப­ரங்கள் ஊடாக பெண்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளது நகை­களை மோசடி செய்­தமை மற்றும் கொள்­ளை­யிட்­டமை உள்­ளிட்ட பல்­வேறு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய நபர் ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­த­தாக ஹங்­வெல்ல பொலிஸார் தெரி­வித்­தனர். ஹங்­வெல்ல பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய பாதுக்க, மீபே நகரில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்­றுடன் நேற்­று­முன்­தினம் இவரைக் கைது செய்­துள்­ளனர். சந்­தேக நப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களின் மூலம், இந்­நபர் பத்­தி­ரிகை விளம்­பரம் ஒன்றின் மூலம் […]

எல்­பிட்­டிய பிர­தேச சபைக்­கான தேர்­த­லுக்கு இடைக்­கால தடை

(எம்.எப்.எம்.பஸீர்) எல்­பிட்­டிய பிர­தேச சபைக்­கான தேர்­தலை நடத்த உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­காலத் தடை உத் ­தரவைப் பிறப்­பித்­துள்­ளது. ஜன­நா­யக ஐக்­கிய தேசிய முன்­னணி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்த அடிப்­படை உரிமை மீறல் மனு மீதான விசா­ர­ணை­களின் போதே இந்த இடைக்­கால தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.   இந்த தடை உத்­த­ரவை உட­ன­டி­யாக காலி தெரி­வத்­தாட்சி அதி­காரி மற்றும் தேர்­தல்கள் ஆணைக் குழுவின் தலை­வ­ருக்கு அறி­விக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான கே.ரி.சித்­ர­சிறி, […]

பிரசார சுவரொட்டிகளை ஒட்டி வீட்டு மதில் அலங்கோலப்படுத்தப்பட்டதால் ஜனாதிபதியிடம் 7,000 ரூபா நஷ்டஈடு கோரும் காத்தான்குடி வேட்பாளர்!

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) காத்­தான்­கு­டிக்கு வருகை தர­வுள்ள ஜனா­தி­ப­தியின் வரு­கை­யை­யொட்டி ஜனா­தி­ப­தியின் விளம்­ப­ரங்­களை ஒட்­டு­வ­தற்­காக தனது வீட்டு மதில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தனால் அது அலங்­கோ­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக தனக்கு 7,000 ரூபா நஷ்ட ஈடு செலுத்­து­மாறும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­குடி நக­ர­ச­பைக்­கான வேட்­பாளர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காத்­தான்­கு­டிக்கு இன்று விஜயம் செய்­கிறார். இவ்­வி­ஜ­யத்­தை­யொட்டி தனது வீட்டு மதி­லில் சுவ­ரொட்டி ஒட்­டப்­பட்டதால் மதில் சேதம­டைந்­துள்­ள­தா­கவும் இதற்­காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என­வும நல்­லாட்­சிக்­கான தேசிய […]

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனத்துக்கு சொந்தமான எரி­பொ­ருளை திருடி பவு­ஸர்­களில் பாவ­னைக்கு உத­வாத உலை எண்­ணெய் கலந்து மோசடி: நால்வர் கைது; 2 பவு­ஸர்­களும் கைப்­பற்­றப்­பட்­டன

(ரெ.கிறிஷ்­ணகாந்) முல்­லே­ரியா, கௌனி­முல்ல பிர­தே­சத்தில், இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான எரி­பொ­ருளை திருடி பாரி­ய­ள­வி­லான மோச­டி­களில் ஈடு­பட்­டமை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் நால்­வரை முல்­லே­ரியா பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர்கள் எரி­பொருள் களஞ்­சி­யங்­க­ளி­லி­ருந்து எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு பவு­ஸர்­களின் மூலம் கொண்­டு­செல்­லப்­படும் எரி­பொ­ருளின் ஒரு பகு­தியை மிகவும் சூட்­சு­ம­மான முறையில் வேறொரு பவு­ஸ­ருக்கு மாற்றி, குறித்த எரி­பொருள் பவு­ஸ­ரி­லி­ருந்து பெற்­றுக்­கொண்ட எரி­பொ­ருட்­க­ளுக்கு பதி­லாக பாவ­னைக்கு உத­வாத உலை எண்­ணெய்யை கலப்­படம் செய்து […]

151 வரு­டங்­களின் பின்னர் இன்று சுப்பர் ப்ளூ மூன், பூரண சந்­தி­ர­கி­ரகணம்!

1866 ஆம் ஆண்டின் பின்னர் சந்­திரன் தொடர்­பான 3 விசேட நிகழ்­வுகள் இன்று ஒரே தினத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன. மிகவும் அரி­தாக நிக­ழக்­கூ­டிய நீல­சந்­திரன், பிர­கா­ச­மான சந்­திரன் மற்றும் பூரண சந்­தி­ர­கி­ரணம் என்­ப­வற்றை சுமார் 151 வரு­டங்­களின் பின்னர் இலங்­கை­ய­ரா­கிய எம்மால் இன்­றி­ரவு அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்கும் என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உடுத்­தொ­குதி மற்றும் வானியல் பிரிவின் பணிப்­பாளர் பேரா­சி­ரியர் சந்­தன ஜன­ரத்ன தெரி­வித்­துள்ளார். Super Blue Blood Moon’ Lunar eclipse என இது குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.   […]