பயிற்சிகளின்போது பாட்டு கேட்டால் வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் – பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கத் தவ­றி­வரும் இலங்கை கிரிக்கெட் அணியை புத்­தாண்டில் உய­ரிய நிலைக்கு இட்டுச் செல்ல உறு­தி­பூண்­டுள்ள புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, வீரர்கள் ஒழுக்கம் பேணு­வதை வலி­யு­றுத்­தி­யுள்ளார். அத்­துடன் அணித் தேர்­விலும் தனக்கு அதி­காரம் இருக்க வேண்டும் எனக் கோரி­யுள்ளார். உலக கிண்ண சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்து 21 வரு­டங்கள் ஆன நிலையில் 2017இல் மூவகை கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் மோச­மான பின்­ன­டைவைக் கண்ட இலங்கை அணியை இன்னும் இரண்டு வரு­டங்­களில் […]

கணவனை பிரிந்து வந்து பலருடன் கள்ளத்தொடர்பு: துணியால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

கணவனை பிரிந்து சென்னைக்கு வந்த இளம்பெண், பலருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. ஓராண்டுக்கு பிறகு அவரது சடலம் கிணற்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை தொடர்பில் கரூர் மாவட்ட பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரூர் மாவட்டம், ஏமூர் அருகேயுள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது 28 வயதான மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தகராறு ஏற்பட்டு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த […]

தேர்தல் பிரசாரத்தின்போது விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 625 குர்ஆன் பிரதிகள் சிக்கின – கற்பிட்டியில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டக் குழு விசாரணை

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் ஒரு­வரால் தேர்தல் பிர­சார காலப்­ப­கு­தியில் விநி­யோ­கிக்கும் நோக்கில் வைத்­தி­ருந்­த 625 புனித குர்ஆன் பிர­தி­கள் கற்­பிட்டி- கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். கற்­பிட்டி பிர­தேச சபைக்கு போட்­டி­யிடும் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து நேற்று முன்­தினம் இரவு இந்த புனித குர்­ஆன்­களை பொலிஸார் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. புத்­தளம் மாவட்ட செய­ல­கத்தில் அமைந்­துள்ள பொலிஸ் தேர்தல் காரி­யா­ல­யத்­துக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் […]

சிறுவர் கார்ட்டூன் கதாபாத்திரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்சித்த சிறுவன் உயிரிழப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்) சிறுவர் கார்ட்டூன் ஒன்றில் வரும் வீரர் கதா­பாத்­தி­ரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்­சித்த சிறுவன் உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பத­வி­சி­றி­புர, ஜயந்­தி­வெவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பத­வி­சி­றி­புர பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். வீட்டில் எவரும் இல்­லாத நேரத்தில் தனது தாயின் உடை­களை அணிந்து, பெண்­களின் உடை­யி­லேயே தனக்­கான தலைக்­க­வ­ச­மொன்­றையும் தயா­ரித்து அணிந்துகொண்டு தனக்கு பிடித்­த­மான கார்­டூனில் வரும் வீரர் ஒரு­வனின் கதா­பாத்­தி­ரத்தை போன்று நடிப்­ப­தற்கு தயா­ரா­கி­யுள்ளார். அதன்­பின்னர் தனது வீட்­டுக்கு முன்­பாக அமைந்­தி­ருந்த மர­மொன்றின் கிளையில் கயிற்றைக் […]

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கூறுகிறார்

சுப்பர் ஸ்டார் ரஜி­னிகாந்த் தனது அர­சியல் பிர­வேசம் குறித்து அறி­வித்­துள்ளார். நான் அர­சி­ய­லுக்கு வரு­வது உறுதி. இது காலத்தின் கட்­டாயம். வரும் சட்­டப்­பே­ரவை தேர்­தலில் நான் தனிக்­கட்சி ஆரம்­பித்து தமிழ்­நாடு முழு­வதும் 234 தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட முடிவு செய்­துள்ளேன் என ரஜி­னிகாந்த் நேற்று அறி­வித்தார். சென்­னையில் உள்ள ராக­வேந்­திரா திரு­மண மண்­ட­பத்தில் தனது ரசி­கர்­களை ரஜினி சந்­தித்து வரு­கிறார். நேற்றைய ஆறா­வது நாள் சந்­திப்பில் தனது அர­சியல் நிலைப்­பாடு குறித்து ரஜினி தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் […]