பொங்கல் தினத்­தன்று சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் கடைசிப் போட்­டியில் றினோன் – கலம்போ எவ்.சி.

(நெவில் அன்­தனி) இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 2017 டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்பந்­தாட்­டத்தின் சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் றினோன், கலம்போ எவ்.சி. அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி தைப்­பொங்கல் திரு­நா­ளான எதிர்­வரும் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் போட்­டியை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வ­தற்கு போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளான டயலொக் ஆசி­யாட்டா நிறு­வ­னமும் ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­தன. ஆனால், தற்­போ­தைய சூழ்­நி­லையில் இப் போட்­டியை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வது உசி­த­மில்லை என இரண்டு தரப்­பி­னரும் தீர்­மா­னித்­ததை அடுத்து இப் போட்டி கொழும்பு குதிரைப் […]

புத்­தாண்டு கால கொண்­டாட்­டங்­களின் போது காய­ம­டைந்த 512 பேரில் 194 பேர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை!

(ரெ.கிறிஷ்­ணகாந்) புத்­தாண்டு ஆரம்­ப­மா­கும்­போது பல்­வேறு அனர்த்­தங்­களில் காய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் அதி­க­ரித்­துள்­ள­தாக திடீர் விபத்து பிரிவின் தாதி அதி­காரி புஷ்பா ரம்­யானி டி சொய்ஸா தெரி­வித்­துள்ளார். இந்த அனர்த்­தங்­களில் அதி­க­மா­னவை வீதி­ வி­பத்­துகள் மற்றும் வீடு­களில் ஏற்­படும் விபத்­துக்களே அதிக பங்­கு­வ­கிக்கின்ற அதே­வேளை வன்­முறை மற்றும் பட்­டாசு பொருட்­களால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் காய­ம­டைந்­த­வர்கள் எண்­ணிக்­கையில் கடந்த வரு­டத்தைவிட இவ்­வ­ருடம் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். பல்­வேறு அனர்த்­தங்கள் […]

இசை­யில் சத­ம­­டித்த இமான்

இன்­றைய முன்­னணி இசையமைப்­பா­ளர்­களில் ஒருவர் டி.இமான். மீடியம் பட்ஜெட் படங்­களின் மோஸ்ட் ேவாண்டட் இசையமைப்­பாளர். “எனக்கு நேரம் இல்லை” என்று படங்­களை தவிர்க்­கிற அள­விற்கு வளர்ந்து நிற்­கிறார். தற்­போது அவர் இசைய மைத்து வரும் ‘டிக் டிக் டிக்’ படம் அவ­ருக்கு 100 ஆவது படம். பள்­ளியில் படிக்­கும்­போதே இசை மீது ஆர்வம் கொண்ட இமான். முறைப்­படி இசை கற்று 15 வயதில் கீ போர்ட் பியேளர் ஆனார். நடிகை குட்­டி­பத்­மினி கிருஷ்­ண­தாஸி என்ற சின்­னத்­திரை தொட­ருக்கு […]

ஆஸி. பகிரங்க டென்னிஸில் செரீனா விளையாடுவது சந்தேகம்?

குழந்தை பிர­ச­வித்த பின்னர் டென்னிஸ் விளை­யாட்டில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்றி தோல்­வியை சந்­தித்த செரீனா வில்லிம்ஸ், அவஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் பங்­கு­பற்­று­வது சந்­தேகம் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் கடந்த வருடம் 2 மாத கர்ப்­பி­ணி­யாக சம்­பி­யனான செரீனா வில்­லியம்ஸ், அதன் பின்னர் பிர­தான போட்­டிகள் எதிலும் விளை­யா­ட­வில்லை. கடந்த செப்­டெம்பர் மாதம் தாயான செரீனா, டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தார். தொடர்ந்து துபாயில் கடந்த மாத இறு­தியில் நடை­பெற்ற […]

டி வில்லியர்ஸ் விளையாடும் விதத்தை மதிக்கிறேன் ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம் – விராத் கோஹ்லி

தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஏ. பி. டி வில்லியர்ஸுக்கும் விராத் கோஹ்லிக்கும் இடையிலான தொடராகப் பார்க்கப்படுகின்றது. இரண்டு அணிகளினதும் ‘சுப்பர் ஸ்டார்’களான இவர்கள் இருவரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகவீரர்கள் நெருங்கிய நண்பர்களும் ஆவர். ஆனால், இருவரும் களத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கடும் போட்டி நிலவும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறினார். “ஏ பி எனது சிறந்த நண்பர். அவரது கிரிக்கெட் விளையாடும் விதத்தை […]