நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சீர­ழி­வின்பால் இட்டுச்செல்­கி­றது; எனது புகைப்­ப­டத்தை காண்­பித்து அர­சியல் நடத்த பொது­ஜன பெர­மு­ன­வுக்கு மாத்­தி­ரமே உரித்­துள்­ளது – முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ

(எம்.சி.நஜி­முதீன்) “ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சீர­ழி­வின்பால் இட்டுச் செல்­கி­றது. அதி­லி­ருந்து நாட்­டைப்­பா­து­காப்­ப­தற்கே பொது­ஜன பெர­முன தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எனது புகைப்­ப­டத்தைக் காண்­பித்து அர­சியல் நடத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன­வுக்கு மாத்­திரம் உரித்­துள்­ளது” என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பணம் செய்யும் நிகழ்வு நேற்­று­ கொழும்­பி­லுள்ள சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் […]

1889 : சப்­ர­க­முவ மாகாணம் ஸ்தாபிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று… ஜனவரி – 04   கிமு 46: டைட்டஸ் லபீனஸ், ருஸ்­பீனா என்ற நகரில் இடம்­பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற் ­க­டித்தார். 1493 : கொலம்பஸ், தான் கண்­டு­பி­டித்த புதிய உலகை (அமெ­ரிக்கக் கண்டம்) விட்டுப் புறப்­பட்டார். 1642 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கைது செய்ய தனது படை­வீ­ரர்­களை அனுப்­பினார். 1698 : லண்­டனில் அரச குடும்­பத்தின் வாசஸ்­த­ல­மாக விளங்­கிய வைட்ஹோல் மாளிகை பெரும் ­ப­குதி தீயினால் […]

நீர்கொழும்பு சிறையில் கைதி உயிரிழந்தமை தொடர்பாக திவுலபிட்டி பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி கைது

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம். பஸீர்) திவு­லப்­பிட்­டிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரின் தடுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி­யொ­ருவர் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் திவு­லப்­பிட்­டிய பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்­ப­தி­காரி, குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.   இந்­நி­லையில், இச்­சம்­பவம் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ரணை களுக்­க­மைய திவு­லப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் கே. எச்.பி. சுமித் பிரே­ம­கு­மார, நேற்று முன்­தினம் இவ்­வாறு குற்­றப்­பு­ல­னாய்வு […]

ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்; சந்தேகத்தில் இருவர் கைது

(கதீஷ்) வவு­னியா மகா­ இறம்­பைக்­குளம் பகு­தியில் ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் வவு­னியா தெற்கு பிர­தேச சபையின் மகா­ இறம்­பைக்­குளம் வேட்­பா­ள­ரான தர்­ம கு­ல­சிங்கம் சுஜி­வனின் தாயார் மீது நேற்­று­முன்தின் இரவு இனந்­தெ­ரி­யாத நபர் மூவர் தலைக்­க­வ­சத்­தினால் தாக்­குதல் மேற்­கொண்டு தப்­பித்து சென்­றுள்­ள­தாக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட தாயார் தர்­ம­கு­ல­சிங்கம் சத்­தி­ய­தேவி ( வயது- 56 ) என்­பவர் கருத்து தெரி­விக்­கையில், இரவு 7.00 மணி­ய­ளவில் மூவர் வீட்­டிக்கு வந்து உங்­க­ளது மகன் […]

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் களனி, வத்தளை நோக்கி வாகனங்கள் வெளியேறுவதற்கான வீதி, 10 ஆம் திகதி மூடப்படும்

(ரெ.கிறிஷ்­ணகாந்) கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லையில் களனி பாலத்­துக்கு அரு கில் களனி மற்றும் வத்­தளை நோக்கி வாக­னங்கள் வெளியே­று­வ­தற்­காக பயன்­படும் வீதி, எதிர்­வரும் 10 ஆம் திகதி முதல் மறு அறி­வித்தல் வரை மூடப்­ப­ட­வுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரிவித்­துள்­ளது.   உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள புதிய களனி பாலத்தின் நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இவ்­வாறு குறித்த வீதி மூடப்­ப­ட­வுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை மேலும் தொிவித்­துள்­ளது. இதன்­போது பயன்­ப­டுத்தக் கூடிய மாற்று வீதி­க­ளையும் அதி­கா­ர­சபை பெய­ரிட்­டுள்­ளது. […]