தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக லிந்துலையில் உருவப் பொம்மை எரித்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன்) லிந்­துலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாக­சேனை தோட்­டத்தில் தோட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு எதி­ராக அத்­தோட்ட மக்கள் வைத்­திய அதி­கா­ரியின் உருவப் பொம்மை மற்றும் டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­பட்­டனர். நாக­சேனை தோட்ட வைத்­தியரால் அத்தோட்­டத்தின் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய வைத்­திய சேவை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை எனவும் சுகா­தார நட­வ­டிக்­கை­களில் அதிக அக்­கறை கொள்­வ­தில்லை எனவும் குற்­றஞ்­சாட்­டியே சுமார் 300க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் கோஷங்­களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

சாய்ந்தமருது சுயேச்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் மாநகர சபையில் அமர முடியாது! – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சாய்ந்­த­ம­ருதில் அவர்கள் தோண்­டிய குழிக்குள் அவர்­க­ளா­கவே வீழ்ந்­துள்­ளார்கள். யாரும் வரக்­கூ­டாது என்று வன்­முறை செய்­தார்கள். ஆனால், இப்­போது சாய்ந்­த­ம­ருதில் தார­ள­மாக கூட்டம் நடத்­தலாம். தேர்­தல்கள் ஆணை­யாளர் இது­தொ­டர்பில் விசா­ரணை நடத்­திக்­கொண்­டி­ருக்­கிறார். தேர்தல் ஆணையாளர் சாய்ந்­த­ம­ருது பள்ளி நிர்­வா­கத்தை கலைக்­கப்­போ­கின்றார். சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மூலம் சுயேச்­சைக்­கு­ழுவில் உறுப்­பி­னர்கள் தெரி­வா­னாலும் சபையில் உட்­கார முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். இறக்­காமம் பிர­தேச சபையில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கங்­களை திறந்­து­வைத்த […]

வவுனியாவில் மாணவி துஷ்பிரயோகம்: 17வயதான இளைஞர் சந்தேகத்தில் கைது!

(கதீஸ்) வவு­னியா ஈச்­சங்­குளம் பகு­தியில் 13 வய­தான பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­கத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளர். கடந்த ஒரு வரு­ட­மாக இரு­வரும் காத­லித்து வந்­துள்ள நிலையில் சம்­பவ தினம் குறித்த மாணவி வீட்டை விட்டு வெளி­யேறி தனது காத­லுடன் சென்­றுள்ளார். மாண­வியின் பெற்றோர் மாலை வரை அவரைத் தேடியும் கண்­டு­பி­டிக்க முடி­யா­மையால் ஈச்­சங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஈச்­சங்­குளம் […]

பாலியல் வல்லுறவுக்கு உள்ளானபோது பெண்கள் அணிந்திருந்த ஆடைகளை சேகரிக்கும் ஜெஸ்மின் பதீஜா

பெண்கள் பாலியல் கொடு­மைக்கு ஆளா­வ­தற்கு அவர்கள் அணியும் ஆடை தான் காரணம் என சிலர் கூறு­வ­துண்டு. பெண்கள் கவர்ச்­சி­யாக ஆடை அணி­வ­துதான் ஆண்­களின் பாலியல் இச்சை தூண்­டப்­பட கார­ண­மா­கி­றது என, பெண்­க­ளையே ஆண்கள் சிலர் குற்றம் சாட்­டு­கின்­றனர். இன்­றைய நாக­ரீக உலகில் பெண்கள் மற்­ற­வர்­களின் கவ­னத்தை கவரும் வகையில் வித வித­மான கவர்ச்­சி­யான ஆடை­களை அணி­வதை நாம் காணலாம். இவ்­வாறு பெண்கள் அணியும் ஆடை­களால் தங்­க­ளுக்கு தாங்­களே ஆபத்தை தேடிக் கொள்­கி­றார்கள் என்ற ஒரு வாதமும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. […]

Time’s Up : பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹொலிவூட் நட்சத்திரங்கள் ஆரம்பித்த திட்டம்

திரைப்­படத் துறை­யிலும் ஏனைய வேலைத்­த­லங்­க­ளிலும் இடம்­பெறும் பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக பாரிய எதிர்ப்புப் பிர­சாரத் திட்­ட­மொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 300 இற்கும் அதி­க­மான நடி­கைகள், இயக்­கு­நர்கள் இணைந்து ஆரம்­பித்த இந்த முன்­மு­யற்சி ரைம்ஸ் அப் (Time’s Up) என அழைக்­கப்­ப­டு­கி­றது. ஹொலிவூட் நடி­கை­க­ளான நட்­டாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன், ரீஸ் விதர்ஸ்பூன், கேட் பிளென்செட், ஈவா லோங்­க­ரியா, அமெ­ரிக்கா ஃபெராரா மற்றும் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தயா­ரிப்­பாளர் ஷோண்டா ரீமெஸ் ஆகி­யோரும் இத்­திட்­டத்­துக்கு ஆத­ர­வளிக்­கின்­றனர். ஒஸ்கார் விரு­து­வென்ற ஹொலிவூட் […]