மீண்டும் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை, இரண்டு வருட பதவிக் காலம் தாராளமாகப் போதும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால

(நெவில் அன்­தனி) “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நிரு­வாக உத்­தி­யோ­கத்தர் பதவி வகிக்கும் ஒரு­வ­ருக்கு இரண்டு வரு­டங்கள் தாரா­ள­மாக போதும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கரு­து­கின்­றது. எனவே, எமது பதவிக் காலத்தை நாங்கள் நீடிக்க விரும்­ப­வில்லை. எனினும் அடுத்த நிரு­வாக உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான தேர்­த­லின்­போது தலைவர் பத­விக்கு போட்­டி­யி­டு­வது குறித்து நான் இன்னும் இறுதித் தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை” என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். மூன்று பிர­தான விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து நடத்­தப்­பட்ட விசேட […]

சமூக விரோத சக்திகளுக்கு இடைஞ்சலாக இருந்ததால் பள்ளிவாசலின் 3 கண்காணிப்புக் கெமராக்களையும் ஒரே இரவில் திருடிச் சென்ற நபர்கள்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர் காட்­டுப்­பள்­ளி­வா­சலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த 3 சி.சி­.ரி.வி. கெம­ராக்கள் சனிக்­கி­ழமை அதி­காலை திரு­டப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி பள்­ளி­வாசல் நிரு­வாகம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளது. இச்­சம்­ப­வம் ­பற்றிச் சமூக சேவை­யா­ளரும் ஏறாவூர் காட்­டுப்­பள்­ளி­வாசல் தலை­வ­ரு­மான எம்.எல். அப்துல் லத்தீப் மேலும் தெரி­விக்­கையில், இந்தக் காட்டுப் பள்­ளி­வா­சலில் முன்னும் பின்­னு­மாக 3 பகு­தி­களில் பொருத்­தப்­பட்­டி­ருந்த காணொளிக் கமெ­ராக்கள் திரு­டப்­பட்­டுள்­ளன. ஊர் மத்­தியில் இது ஒரு முக்­கி­யத்­துவம் வாய்ந்த இட­மென்­பதால் இங்கு காணொளிக் கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆனால், […]

2008 : லசந்த விக்­கி­ர­ம­துங்க கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று… ஜனவரி – 08   1297 : மொனாக்கோ சுதந்­திரம் பெற்­றது. 1782 : திரு­கோ­ண­மலை கோட்­டையை பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர். 1815 : அண்ட்ரூ ஜக்ஸன் தலை­மையில் ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் லூசி­யா­னாவின் நியூ ஓர்­லியன்சில் பிரித்­தா­னி­யரைத் தோற்­க­டித்­தது. 1838 : அல்­பிரட் வையில், புள்­ளி­க­ளையும் கோடு­க­ளையும் கொண்ட தொலைத்­தந்­தியை அறி­மு­கப் ­ப­டுத்­தினார். 1867 : அமெ­ரிக்­காவின் வோஷிங்டன் டிசி நகரில் கறுப்­பின அமெ­ரிக்­கர்கள் முதல் தட­வை­யாக வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­டனர். 1889 : ஹெர்மன் […]

புலி­க­ளு­ட­னான சமரின் போது துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கான படை வீரரின் இத­யத்­தி­லி­ருந்து 20 வரு­டங்­களின் பின்னர் அகற்­றப்­பட்ட ரவை!

(ரெ.கிறிஷ்­ணகாந்) துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி காய­ம­டைந்த இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் வீர­ரான விஜே­சுந்­தர பண்­டா­ரவின் இத­யத்தில் சிக்­குண்­டி­ருந்த துப்­பாக்கி ரவை ஒன்று, சுமார் 20 வரு­டங்­களின் பின்னர் சத்­திர சிகிச்­சையின் மூலம் அகற்­றப்­பட்ட சம்­பவம் காலி­யி­லுள்ள வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்­றுள்­ளது. காலி­யி­லுள்ள கூட்­டு­றவு வைத்­தி­ய­சா­லையின் இத­யநோய் நிபுணர் நாமல் கமகே உள்­ளிட்ட வைத்­தியர் குழா­மினால் இந்த சத்­திர சிகிச்சை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ரவை அகற்­றப்­பட்­டதன் பின்னர் விஜே­சுந்­தர தற்­போது சிறந்த தேகா­ரோக்­கி­யத்­துடன் காணப்­ப­டு­கின்றார். இந்­நி­லையில், சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உள்­ளான […]

நாவலப்பிட்டி கொள்ளையுடன் தொடர்புடைய அறுவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) நாவ­லப்­பிட்டி பிர­தே­சத்தில் லொறி ஒன்றின் சார­தி­யையும், உத­வி­யா­ள­ரையும் தாக்­கி­விட்டு 6 இலட்­சத்து 19 ஆயி­ரத்து 600 ரூபாவை கொள்­ளை­யிட்டுச் சென்ற சம்­பவம் தொடர்பில் 6 சந்­தேக நபர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. ஹொர­ணை­யி­லி­ருந்து பேக்­கரி உற்­பத்­தி­களை ஏற்­றிக்­கொண்டு கினி­கத்­தேனை வழி­யாக நாவ­லப்­பிட்டி நக­ருக்கு பய­ணித்துக் கொண்­டி­ருந்த லொறி­யொன்றை கடந்த 4 ஆம் திகதி, வேனில் வந்த குழு­வினர் வழி­ம­றித்து, லொறியின் சாரதி உள்­ளிட்ட இரு­வரை தாக்­கி­விட்டு, இவ்­வாறு பணத்தை கொள்­ளை­யிட்டுச் […]