ஜெயாவின் உடல் பதப்படுத்தல் குறித்து உடற்­கூறு மருத்­துவரின் விளக்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் உடலை பதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான ஆதா­ரங்­களை முன்னாள் நீதி­ய­ரசர் ஆறு­மு­க­சாமி தலைமையிலான விசா­ரணை ஆணை­யத்தில் சென்னை மருத்­துவக் கல்­லூரி துணைத் தலைவர் மருத்­துவர் சுதா சேஷய்யன் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார் ” என்­கின்­றனர் தமி­ழக அரச மருத்­து­வர்கள். முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பான விசா­ர­ணையைத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறார் முன்னாள் நீதி­ய­ரசர் ஆறு­மு­க­சாமி. ஆணை­யத்தில் ஆஜ­ரான பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறிய மருத்­துவர் சுதா சேஷய்யன், `ஜெய­ல­லி­தாவின் உடல் பதப்­ப­டுத்­தப்­ப­ட்டமை குறித்து நீதி­ப­தி­யிடம் விளக்­கினேன். கடந்த டிசம்பர் […]

தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் கூறிய தாய்லாந்து பிரதமர்

தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா. கூறியதுடன், ஒலிவாங்கிக்கு (மைக்) முன்னால் தனது கட் அவுட்டை விட்டுச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஒச்சா, 2014 ஆம் ஆண்டு இரத்தம்சிந்தா புரட்சியொன்றின் மூலம் தாய்லாந்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் […]

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்: ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் தலைவரானார்

(நெவில் அன்­தனி) இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணியின் தலைவர் பத­வியை ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் ஏற்­றுள்ளார். ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான தொடரில் அடைந்த தோல்­வியை அடுத்து அணித் தலைவர் பத­வியை ஏஞ்­சலோ மெத்யூஸ் துறந்த ஆறு மாதங்­களில் மீண்டும் அந்தப் பொறுப்பு அவ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு அப்­பாலும் அவர் தலை­வ­ராக பதவி வகிப்பார் என தெரி­வுக்­குழுத் தலைவர் க்ரஹம் லெப்ரோய் கூறினார். இதன் மூலம் அணித் தலைவர் […]

தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வீடு வீடாக சென்ற வேட்­பா­ளரின் மோட்டார் சைக்கிள் திரு­டப்­பட்­ட­தாக பொலிஸில் புகார்!

(மயூரன்) தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வீடு­க­ளுக்கு சென்ற வேட்­பா­ளரின் மோட்டார் சைக்கிள் திரு­டப்­பட்டுள்­ள­தாக சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் கைதடி தெற்கு வட்­டா­ரத்தில் போட்­டி­யிடும் ஒருவர் கைதடி தெற்கில் தான் போட்­டி­யிடும் வட்­டா­ரத்தில் உள்ள வீடு­க­ளுக்கு தேர்தல் பரப்­பு­ரைக்­காக சென்­றுள்ளார். அதன் போது வட்­டார எல்­லையில் தனது மோட்டார் சைக்­கிளை நிறுத்தி விட்டு நடை­யாக ஒவ்­வொரு வீடு­க­ளாக சென்று வாக்கு கோரி பரப்­புரை செய்­துள்ளார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்­திய […]

ஆஸி.பகிரங்க டென்னிஸிலிருந்து அஸரென்கா வாபஸ்: குழந்தை பராமரிப்பு தொடர்பான வழக்கு காரணம்

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் இரண்டு தட­வைகள் சம்­பி­ய­னான விக்­டோ­ரியா அஸ­ரென்கா இவ் வருடப் போட்­டி­க­ளி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்ளார். அவ­ரது 11 மாத ஆண் குழந்­தைக்கு யார் பாது­கா­வலர் என்ற சட்டப் பிரச்­சினை கார­ண­மா­கவே அவர் வாபஸ் பெற்­றுள்ளார். கடந்த வருடம் விம்­பிள்டன் போட்­டி­களின் பின்னர் தனது காதலர் பில்லி மெக்­கீ­கி­ட­மி­ருந்து அஸ­ரென்கா பிரிந்தார். இதை­ய­டுத்து இத்­தம்­ப­தியின் மகனை பரா­ம­ரிப்­பது யார் என்­பது தொடர்பில் வழக்கு விசா­ரணை அமெ­ரிக்க நீதி­மன்றில் நடை­பெ­று­கி­றது. இந்த சட்டப் பிரச்­சி­னைக்­கான தீர்ப்பு […]