எழுத்தாளர் ஞானி காலமானார்

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் இன்று காலமானார். பத்திரிகையாளர், நாடகஆசிரியர் என பன்முகதன்மை கொண்டவாராக திகழ்ந்த ஞானி சங்கரன் (63) கடந்த சில காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே: உயர்நீதிமன்றம் தெரிவிப்பு

இலங்கையின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களே பதவியிலிருக்க முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. தான் 6 வருடங்கள் வரை பதவியிலிருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்த உயர் நீதிமன்றம், அரசியலமைப்பின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களே பதவியிலிருக்க முடியும் என தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.  

குறைபார்வை உடையவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்; இலங்கை அணிக்கு சாதனைமிகு வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் பாகிஸ்தானிலும் கூட்டாக நடைபெற்றுவரும் குறைபார்வை உடையவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆரம்பப் போட்டியில் அசத்திய இலங்கை, இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்தது. எனினும் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நேபாளத்தை 340 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குறைபார்வை உடைய இலங்கை அணி 40 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 494 ஓட்டங்களைக் குவித்தது. முதலிரண்டு விக்கெட்களை குறைந்த எண்ணிக்கைக்கு இழந்த இலங்கை அணிக்கு. அணித் […]

தேர்தல் சட்டமீறல், வன்முறைகள் தொடர்பில் 18 வேட்பாளர்கள் உட்பட 162 பேர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் சட்­ட­மீறல் மற்றும் வன்­மு­றைகள் தொடர்பில் நேற்­று­வரை 18 வேட்­பா­ளர்கள் உட்­பட 162 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் திக­தி­முதல் நேற்­றுக்­காலை 6 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யி­லேயே இந்த கைதுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன. அதற்­க­மைய குறித்த காலப்­ப­கு­தியில் பொது இடங்­களில் சுவ­ரொட்­டிகள், பெனர்­களை காட்­சிப்­ப­டுத்­தி­யமை, அன்­ப­ளிப்பு வழங்­கி­யமை, பிர­சார கையே­டுகள் விநி­யோ­கித்­தமை உள்­ளிட்ட தேர்தல் சட்­டத்­தினை மீறும் வகை­யி­லான செயற்­பா­டுகள் […]

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கேகாலை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விபத்து ஒன்றில் சிறுமி ஒருவர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து நடத்­தப்­பட்ட பாரிய ஆர்ப்­பாட்டம் தொடர்பில் 13 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கேகாலை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கேகாலை – அவி­சா­வளை பிர­தான வீதியில் பிங்­தெ­னிய பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் பகல் 7 வய­தான சிறு­மி­யொ­ருவர் தனியார் பஸ்­ஸொன்றில் மோதுண்டு உயி­ரி­ழந்­த­துடன் அச்­சி­று­மியின் பாட்­டியும், மற்­றொரு பெண் பிள்­ளை­யொ­ரு­வரும் காய­ம­டைந்­துள்­ளனர். வீதியின் வலது பக்­கத்தால் பய­ணித்­த­போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து, கேகாலை – அவி­சா­வளை வீதியை தொர­ண­க­ஹ­பி­டிய […]