2008 : இலங்­கையில் போர் நிறுத்தக் கண்­கா­ணிப்புக் குழு தனது பணி­களை நிறுத்­தி­யது

வரலாற்றில் இன்று… ஜனவரி – 16   1547 : நான்காம் இவான் ரஷ்­யாவின் சார் மன்­ன­னாக முடி­சூ­டினான். 1581 : இங்­கி­லாந்து நாடா­ளு­மன்றம் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தை சட்ட விரோ­த­மா­ன­தாக்­கி­யது. 1707 : ஸ்கொட்­லாந்து, இங்­கி­லாந்­துடன் இணைந்து ஐக்­கிய இராச்­சி­ய­மாக உரு­வா­வ­தற்கு ஏது­வாக அமைந்த சட்­ட­மூ­லத்தை நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது. 1761 : இந்­தி­யாவின் பாண்­டிச்­சே­ரியை பிரான்­ஸி­ட­மி­ருந்து பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர். 1795 : நெதர்­லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தை பிரான்ஸ், கைப்­பற்­றி­யது. 1864 : ஜேர்­மனி மீது […]

கலம்போ எவ்.சி. சம்பியன்

(நெவில் அன்­தனி) கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் ஞாயி­றன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெற்ற டயலொக் சம்­பியன்ஸ் லீக் சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் கால்­பந்­தாட்டப் போட்­டியில் றினோன் கழ­கத்தை 1–0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட கலம்போ எவ்.சி. மூன்­றா­வது தொடர்ச்­சி­யான தட­வை­யாக சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது. மேலும், இப் போட்­டியில் குறைந்­தது மூன்று கோல் போடும் வாய்ப்­பு­களை றினோன் அணி­யினர் தவ­ற­விட்­டதால் அவர்­க­ளது சம்­பி­ய­னாகும் எதிர்­பார்ப்பு மூன்­றா­வது தட­வை­யாக சித­ற­டிக்­கப்­பட்­டது. போட்­டியின் 38ஆவது நிமி­டத்தில் தனது முன்னாள் கழ­கத்­துக்கு […]

1,600 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் போதைப் பொருள் அழிக்கப்பட்டது; ஜனாதிபதி, பிரதமர், நீதிவான், அமைச்சர்களும் பார்வையிட்டனர்!

(இரோஷா வேலு) தென்­னா­சி­யா­வி­லேயே கைப்­பற்­றப்­பட்­டதில் மிக அதி­க­ள­வா­ன­தாகக் கரு­தப்­படும் 16 பில்­லியன் (1600 கோடி) ரூபா பெறு­மதி கொண்ட 928 கிலோ கிராம் 229 கிராம் நிறை­யுடைய கொக்­கேயின் போதைப் பொருள் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கொழும்பு பிர­தம நீதிவான் லால் ரண­சிங்க பண்டார ஆகியோர் முன்­னி­லையில் அழிக்­கப்­பட்­டது. போதைப் பொருள் தடுப்பு தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி மற்றும் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவின் மேற்­பார்­வையில் கட்­டு­நா­யக்­கா­வி­லுள்ள இன்சி (INSEE) நிறு­வ­னத்தின் […]

அமைச்சர் மஹிந்த அமரவீரவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்ற ஹெலியின் விமானிக்கு வழி தெரியாததால் மன்னாரை நோக்கி பயணம்

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம். பஸீர்) அமைச்சர் மஹிந்த அம­ர­வீர பலாலி நோக்கிப் பய­ணித்த ஹெலி­கொப்டர் தவ­றான வழியில் செலுத்­தப்­பட்­ட­மை­ யினால் ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய விபத்து மயி­ரி­ழையில் தவிர்க்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம், அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற பொங்கல் தின விழாவில் கலந்துகொள்­வ­தற்­காக நேற்று முன்­தினம் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு சொந்­த­மான ஹெலி­கொப்டர் ஒன்றில் பலாலி சிவில் விமான நிலை­யத்தை நோக்கி பய­ணித்தார். கொழும்­பி­லி­ருந்து ஹெலி­கொப்டர் மூலம் பலாலி நோக்கி பய­ணித்தால் ஒரு […]

கொழும்பு – யாழ். ரயிலில் தீ

(மயூரன்) கொழும்­பி­லி­ருந்து யாழ். நோக்கிச் சென்ற குளி­ரூட்­டப்­பட்ட ரயிலின் எஞ்ஜின் பகுதி தீப்பற்­றிய சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. சாவ­கச்­சேரி மீசாலை பகு­தியில் ரயில் சென்று கொண்­டி­ருந்த போதே இந்த தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து ரயில் நிறுத்­தப்­பட்டு யாழ். மாந­கர சபையின் தீய­ணைப்பு பிரி­வி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்குச் சென்று தீயைக் கட்­டுப்­பா­ட­டுக்குள் கொண்டு வந்­தனர். பின்ன்ர ரயில் தனது பய­ணத்தைத் தொடர்ந்­தது, இயந்­திர கோளாறு கார­ண­மா­கவே இந்தத் தீ விபத்து ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.