போதையில் ஆளில்லா விமானங்களை செலுத்துவதற்கு அமெரிக்க நியூஜேர்ஸி மாநிலத்தில் தடை!

போதையில் வாகனம் செலுத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­ப­டு­வது சாதா­ர­ண­மா­னது. ஆனால், அமெ­ரிக்க மாநி­ல­மொன்றில் போதையில் ட்ரோன் எனும் ஆளில்லா விமா­னத்தை இயக்­கு­வ­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மது மற்றும் ஏனைய போதைப் பொருட்­களை பயன்­ப­டுத்­திய நிலையில், ஆளில்லா விமா­னங்­களை இயக்­கு­வதை அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்ஸி மாநிலம் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாக்­கி­யுள்­ளது. நியூஜேர்ஸி மாநில சட்­ட­ச­பையின் ஜன­நா­யகக் கட்சி உறுப்­பி­னர்­களின் அனு­ச­ர­ணை­யுடன் முன்­வைக்­கப்­பட்ட இந்த சட்­ட­மூ­லத்­துக்கு குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி கடந்த திங்­கட்­கி­ழமை அங்­கீ­கா­ர­ம­ளித்தார். இச்­சட்­டத்தை மீறு­வோ­ருக்கு 6 மாதங்கள் […]

ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­க­ட­னத்­தின்­படி எமக்கு சுயாட்சி உரித்­துண்டு!-இரா .சம்­பந்தன்

(சேனையூர் நிருபர்) “ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­க­ட­னத்­தின்­படி எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்­கப்­பட வேண்டும். நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்குள் நியா­ய­மான அந்­தஸ்தை பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கின்றோம்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா .சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­ம­லை நக­ர­ச­பையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யிடும் அப­ய­புர வட்­டார வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து இரா­ஜ­வ­ரோ­தயம் சதுக்­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொட­ர்ந்து உரை­யாற்­றிய அவர், […]

அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கைத் தேவையை நிறைவு செய்யவே ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார்: கோபப்பட்டு வெளிநடப்புச் செய்யவில்லை; அமைச்சர்கள் ராஜித, தயாசிறி தெரிவிப்பு

(நமது நிருபர்) அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இயற்கை தேவையை நிறைவு செய்­யவே ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து சென்றார். மாறாக கோபப்­பட்டு வெளி­ந­டப்புச் செய்­ய­வில்லை. இயற்கை கடமை எல்­லோ­ருக்கும் வரும் என்று இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளர்­க­ளான ராஜித சேனா­ரட்ண மற்றும் தயா­சிறி ஆகியோர் தெரி­வித்­தனர். அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி. க்கள் ஜனா­தி­ப­தியை விமர்­சிக்­காத வகையில் பொறுப்புக் கூறு­வ­தாக பிர­தமர் உறு­தி­ய­ளித்தார். சுதந்­திரக் கட்­சி­யினர் குறித்து ஜனா­தி­ப­தியும் அந்த விட­யத்தில் உறு­தி­ய­ளித்தார் என்றும் அமைச்­ச­ரவை […]

பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினையுடன் புத்தாண்டு வாழ்த்து : பேஸ்புக்கில் பதிவு செய்தவர்களுக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் புகைப்­படம், புலி­களின் இலட்­சினை அடங்­கிய 2018 புது வருட வாழ்த்­துக்­களை பேஸ்புக்கில் பதிவு செய்து அதனை பகிர்ந்­த­தாக கூறப்­படும் இரு­வ­ரையும் எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் தனுஜா ஜய­துங்க முன்­னி­லையில் இவர்கள் ஆஜர் […]

23 வயது மனைவியை கொலை செய்து மலசல குழியில் போட்ட கணவன் கைது!

ஹம்­பாந்­தோட்டை ஹம்­பேகமுவ -கன்­டி­ய­பிட பிர­தே­சத்தில் தனது மனை வியை கொலை செய்து அவ­ரது சட­லத்தை கழி­வறைக் குழியில் போட்டார் என்ற சந்­தே­கத்தில் அவ­ரது சடலம் கழி­வறைக் குழியில் போட்டார் என்ற சந்­தே­கத்தில் அவ­ரது கண­வரைப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 23 வய­தான கொட­வே­ஹெ­ர­மங்­கட பகு­தியைச் சேர்ந்த பெண் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார். பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து குறித்த வீட்­டுக்குச் சென்ற அங்­கி­ருந்த மல­ச­ல­கூடக் குழியை சோத­னை­யிட்ட போது பெண்ணின் சட­லத்தை மீட்­டுள்­ளனர். இது தொடர்­பான மேல­திக […]