புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி, சட்டத்துறை மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு பிர­தே­சத்தில் சட்டத்துறை மாணவி ஒருவர் அவ­ரது கணி­னியை சீர­மைக்க, அது தொடர்­பி­லான மையம் ஒன்­றுக்கு கொடுத்த நிலையில், அதில் இருந்த புகைப்­ப­டங்­களை இணை­யத்தில் வெளியி­டு­வ­தாகக் கூறி இலஞ்சம் கோரிய குற்­றச்­சாட்டில் நபர் ஒரு­வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் நேற்று கைது செய்­துள்­ளனர். 35 வய­து­டைய இரா­ஜ­கி­ரிய – கொஸ்­வத்த பகு­தியைச் சேர்ந்த, தொலை­பேசி மற்றும் கணினி சீர­மைப்பு மையம் ஒன்றின் உரி­மை­யாளர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்பட்­டுள்­ளா­ரென பொலிஸார் தெரி­வித்­தனர். கைது செய்­யப்பட்ட […]

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நவாஸ் உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு

(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிர­தம நீதி­ய­ர­சரும் முன்னாள் சட்­டமா அதி­ப­ரு­மான மொஹான் பீரிஸ், முன்னாள் மேல­திக சொலி­சிற்றர் ஜென­ரலும் தற்­போ­தைய மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதியரசரு­மான மொஹம்மட் நவாஸ், இலங்கை மின்­சார தனியார் நிறு­வ­னத்தின் முன்னாள் செய­லாளர் எம்.எம்.சி. பேர்டின­ன்டஸ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு நேற்று வழக்குத் தாக்கல் செய்­தது. கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார முன்­னி­லையில் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இந் நிலையில் குறித்த மூவ­ரையும் எதிர்­வரும் மார்ச் […]

லிந்துலையில் இரு கடைகள் தீக்கிரை

)க.கிஷாந்தன்) லிந்­துலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மெராயா நகரில் நேற்று அதி­காலை இரு கடைகள் முற்­றாக எரிந்து சேத­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இத் தீவி­பத்தில் எவ­ருக்கும் உயி­ரா­பத்தோ, காயங்­களோ ஏற்­ப­ட­வில்லை. ஆனால், கடை­க­ளி­லி­ருந்த பொருட்கள் முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன. பிர­தேச பொது மக்கள், பொலிஸார், நுவ­ரெ­லியா மாந­கர சபை­யி­னரின் தீய­ணைப்பு பிரி­வினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர். தீ ஏற்­பட்­ட­தற்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. லிந்­துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.