ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் நிய­ம­னம்

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்­சராக செந்தில் தொண்­டமான் ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜய­சிங்க முன்­னி­லையில் இன்­று சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டார்.

தொப்­பிக்­கல காட்­டி­லி­ருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை நான்தான் உரு­வாக்­கினேன் – விநா­ய­க­மூ­ர்த்தி முர­ளி­தரன்

(பெரி­ய­போ­ர­தீவு நிருபர்) என்­னி­ட­முள்ள 6000 போரா­ளி­களில் 2000 பேரை வன்­னிக்கு அனுப்­பு­மாறு தலைவர் பிர­பா­கரன் என்­னிடம் கேட்டுக் கொண்டார். நான் எனது போரா­ளி­களை பலிக்­க­டா­வாக்க விரும்­ப­வில்லை, அவர்­களை அனுப்­ப­மாட்டேன் என தெரி­வித்தேன். ஏற்­க­னவே வீட்­டுக்கு ஒரு போரா­ளி­யைப் பல­வந்­த­மாகப் பிடித்து வைத்­தி­ருந்தோம். இவ்­வாறு பல­வந்­த­மாக பிடித்து வைத்­துள்ள போரா­ளி­களை சண்­டைக்கு அனுப்­பினால் என்ன நடக்கும் என்­பது நமக்குத் தெரி­யும்­தானே! இவ்­வாறு தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­னணியின் தலை­வரும் முன்னாள் பிர­தி­ய­மை­ச்ச­ரு­மான விநா­ய­க­மூ­ரத்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தெரி­வித்­துள்ளார். […]

யாழ். புங்­கு­டு­தீவில் மோட்டார் சைக்கிள் மீது கடற்­படை கவச வாகனம் மோதி மாணவி பலி

(மயூரன்) யாழ். புங்­கு­டு­தீவில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு சொந்­த­மான கவச வாகனம் ஒன்று மோதி பாட­சாலை மாணவி ஒருவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார். புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் இன்று­கா­லை இந்தச் சம்­பவம் இடம்­பெற்றுள்­ளது. குறித்த மாணவி பாட­சா­லைக்கு தனது உற­வி­ன­ருடன் மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ளார்.  அதன்போது புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் கடற்­படை முகாம்­க­ளுக்கு உணவுப் பொருட்­களை விநி­யோகம் செய்ய பயன்­ப­டுத்­தப்­படும் கவச வாகனம் மாணவி பய­ணித்த மோட்டார் சைக்­கி­ளுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

லொறி விபத்தில் சாரதி காயம்

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று  இர­வு 7 மணியளவில் கனரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி காயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.  

காணிகளின் உரிமையாளர்களாகத் தொழிலாளர்கள் மாறும்போதே மலையகம் அபிவிருத்தி அடைந்ததாகக் கூறமுடியும்!- முத்து சிவலிங்கம்

(க.கிஷாந்தன்) எந்த அர­சாங்கம் வந்­தாலும் நாம் தோட்­டங்­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. இந்த அர­சாங்கம் தோணியில் பய­ணிக்கும் அர­சாங்­க­மாகத் தான் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக இந்த அர­சினால் நீண்ட காலத்­துக்குச் செல்ல முடி­யாது என இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் நுவ­ரெ­லியா மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள தோட்ட கமிட்டித் தலைவர்கள், தலை­வி­மார்­க­ளுக்­கி­டையில் ஹட்டன் டி.கே.டபிள்யூ கலா­சார மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தெளி­வூட்டும் […]