தேசிய அடை­யாள அட்­டைகள், வாக்­காளர் அட்­டைகள் பணத்துக்கு வாங்­கப்­ப­டு­வ­தாக பொலி­ஸா­ருக்குத் தகவல்

(ரெ.கிறிஷ்­ணகாந்) உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை முன்­னிட்டு பல பிர­தே­சங்­களில் வாக்­கா­ளர்­களின் தேசிய அடை­யாள அட்டை மற்றும் வாக்­காளர் அட்­டைகள் என்­பன சில தரப்­பி­னர்­களால் பணம் கொடுத்­து­வாங்­கப்­ப­டு­வது தொடர்­பாக தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார். கட்­சி­யொன்றை சேர்ந்­த­வர்கள் பிறி­தொரு கட்­சி­யொன்றின் ஆத­ர­வா­ளர்­க­ளிடம் பேரம்­பேசி, அவர்­க­ளது தேசிய அடை­யாள அட்­டைகள் மற்றும் வாக்­காளர் அட்­டைகள் என்­ப­ன­வற்றை பணம் கொடுத்­து­வாங்­கு­வ­தா­கவும், இரு தரப்பு சம்­ம­தத்­துடன் இச்­செ­யற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற போதிலும் உள்­ளூ­ராட்சி சபை கட்­டளைச் சட்த்­துக்­க­மைய […]

அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்கக் கோரும் மனு கொழும்பு மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு

அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு 114 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 7 பேருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் கோட்டாபாய ராஜபக்ஷ வழக்கத் தொடுத்திருந்தார்.

பதுளை பாட­சாலை அதி­பரை மண்­டி­யிடச் செய்த சம்­பவம்: ஊவா முதல்­வ­ரிடம் மனித உரி­மைகள் ஆணைக்­குழு கொழும்பில் விசா­ரணை!

(ரெ.கிறிஷ்­ணகாந்) பதுளை தமிழ் மகளிர் கல்­லூ­ரியின் அதி­பரை மண்­டி­யிடச் செய்த சம்­பவம் தொடர்பில் வாக்­கு­மூலம் அளிப்­ப­தற்­காக ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க நேற்­றுக்­காலை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு வருகை தந்­தி­ருந்தார். நேற்று ஆணைக்­கு­ழுவில் ஆஜ­ரா­கு­மாறு ஊவா மாகாண முதலமைச்சருக்கு அறி­வித்­த­லொன்று விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும், விசா­ர­ணை­க­ளுக்­காக தனக்கு வேறொரு தின­மொன்றை பெற்றுக் கொடுக்­கு­மாறு அவர் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தலை­மை­ய­கத்­திடம் எழுத்­து­மூ­ல­மாக கோரிக்கை முன்­வைத்­தி­ருந்த போதிலும் அதற்கு பதி­ல­ளித்த ஆணைக்­குழு, வேறொரு தினத்தை பெற்­றுக்­கொ­டுக்க […]