இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யான நிலையில் ஒடுக்­கப்­பட்ட இன­மாக 150 வருட கால பூர்­வீக மலையக சமூகம்! – கொழும்பு ஆர்ப்­பாட்­டத்தில் கண்­டனம்

(நா.தினுஷா) இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கியும் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பிய தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சுகந்­திரம் இது­வ­ரையில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. 150 வரு­டங்­க­ளாக இந்­நாட்டின் வளர்ச்­சிக்­காக பாடு­பட்டு வரும் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எவ்­வித அடிப்­படை உரி­மை­க­ளையும் பெற்­றக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என தோட்ட தொழி­லாளர் மத்­திய நிலையம் மற்றம் சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு ஆகி­யன தெரி­வித்­துள்­ளன. மலை­யக தோட்ட மக்­களின் வதி­விட வச­தி­க­ளுகள், அவர்­க­ளுக்­கான ஊழியர் நிதிய வச­தி­களை ஏற்ப்­ப­டுத்தி தரு­மாறு கோரி நேற்று புறக்­கோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. […]

2,363 இடங்­களில் மண்­ச­ரிவு அபாயம்

(இரா­ஜ­துரை ஹஷான்) நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள 2,363 இடங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் விடுக்­கப்­பட்ட அறிக்­கையில், மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இடங்கள் அதி­க­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன், அதன் எண்­ணிக்கை 393ஆக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மாத்­தறை மற்றும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டங்­களில் 569 இடங்­களும்,காலி மாவட்­டத்தில் 310,கேகாலை மாவட்­டத்தில் 128,கொழும்பு தொடக்கம் கம்­பஹா வரை­யான பகு­தி­களில் 44 இடங்­களும் அபாய வல­யத்தில் காணப்­ப­டு­வ­தாக கள ஆய்வின் தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன. இதன்­படி […]

பெண் வேட்­பாளர் துஷ்­பி­ர­யோகம்; சந்­தேக நபர் தலை­ம­றைவு

(ரெ.கிறிஷ்­ணகாந்) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் பெண் வேட்­பாளர் ஒரு­வரை பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் அவ­ரது ஆத­ர­வாளர் ஒரு­வரை கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக வெலி­கந்த பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட வேட்­பா­ளரால் வெலி­கந்த பொலிஸ் நிலை­யத்தில் சம்­பவம் குறித்து கடந்த 2 ஆம் திகதி முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேட்­பா­ள­ரான பெண், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­நபர் அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்­நி­லையில், சம்பவம் […]

மிக் விமானக் கொள்­வ­னவு மோசடி விவ­காரம் தொடர்பில் தேடப்­படும் உத­யங்க வீர­துங்க அமெ­ரிக்கா செல்ல முற்­பட்ட போது துபாயில் கைது; தன்னை யுக்ரைனுக்கு நாடு கடத்­து­மாறு அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டுகோள்!

(எம்.எப்.எம்.பஸீர்) மிக் – 27 ரக விமானக் கொள்­வன வின்போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேக நப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்க துபாயில் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார். தனது மனை­வி­யுடன் அமெ­ரிக்கா நோக்கிச் செல்ல துபாய் சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு உத­யங்க வீர­துங்க சென்றபோது விமான நிலைய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் அவரை கைது செய்து […]

ஆட்­டோ -­ லொறி விபத்தில் நால்வர் பலி!

(ரெ.கிறிஷ்­ணகாந், செங்­க­ட­கல நிருபர்) தம்­புத்­தே­கம – கல்­னேவ வீதியில் திஸ்­ப­னே­புர பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுவன் உட்­பட நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், மேலும் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக தம்­புத்­தே­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். நேற்­றுக்­காலை நோயாளி ஒரு­வரை ஏற்­றிக்­கொண்டு பய­ணித்த சிறிய லொறி ஒன்றும் எதிரில் வந்த முச்­சக்­க­ர­வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்­டதில் விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இவ்­வி­பத்தில் முச்­சக்­க­ர­வண்­டியில் மூன்று ஆண்­களும் சிறுவன் ஒரு­வ­ரு­மாக நால்­வரும் லொறியில் பய­ணித்த மூன்று ஆண்­களும் பெண் […]