ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்து காணப்பட்ட சிறுத்தை!

(க.கிஷாந்தன், டீ சந்ரு) ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட காசல்ரீ நீர்த்­தேக்­கத்­துக்கு அண்­மித்த பகு­தியில் ஹட்டன் லெதண்டி தோட்­டத்தில் உயி­ரி­ழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பகு­தியில் இன்­று காலை சிறுத்­தைக்­குட்டி ஒன்று உயி­ரி­ழந்து கிடப்­ப­தனைக் கண்ட பிர­தேச மக்கள் ஹட்டன் பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை வழங்­கி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து, அங்கு சென்ற பொலிஸார் சிறுத்­தையின் சட­லத்தை மீட்டு நல்­ல­தண்ணி வன­வி­லங்கு காரி­யா­லய அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கவுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

கணவனை குத்தி விட்டு கத்தியுடன் பொலிஸில் சரணடைந்த மனைவி!

(மதுரங்குளி நிருபர்) மனையின் கத்­திக் குத்­துக்கு இலக்­கான கணவர் ஒருவர் பலத்த காயங்­க­ளுடன் முந்தல் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரே இவ்­வாறு காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வ­ராவார். தனது கண­வரை கத்­தியால் குத்தி காயப்­ப­டுத்­திய மனைவி தாக்­கு­த­லுக்குப் பயன்­ப­டுத்­திய கத்­தி­யுடன் முந்தல் பொலிஸ் நிலை­யத்தில் சென்று சர­ண­டைந்­துள்ளார். முந்தல் பொலி ஸார் குறித்த பெண்ணைக் கைது செய்­துள்­ளனர். முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் […]

கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேரை தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் தனது 30 வயதான மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் திகதி சக்திவேல் வீட்டின் பின்புறத்திலுள்ள ஏரியில் சக்திவேல் சடலமாக கண்டுபிடிக்கப் பட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி பொலிஸாருக்கு தகவல் […]

ஆசி­ரியர் சங்கம் ஆர்ப்­பாட்­டம்

(நுவரெலிய நிருபர், கேதீஸ், டீ. சந்ரு) பதுளை பாட­சா­லையின் பெண் அதி­பரை மண்­டி­யிடச் செய்த சம்­பவம் தொடர்பில் ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ரையும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செய­லா­ள­ரையும் மாகாண கல்விப் பணிப்­பா­ள­ரையும் வல­யக்­கல்விப் பணிப்­பா­ள­ரையும் உட­ன­டி­யாக பதவி நீக்க வேண்டும் எனக் கூறி மலை­யக ஆசி­ரியர் முன்­னணி, ஆசி­ரியர் விடு­தலை முன்­னணி, இலங்கை ஆசி­ரியர் சங்கம், இலங்கை கல்வி சமூக சம்­மே­ளனம், தமிழர் ஐக்­கிய ஆசி­ரியர் சங்கம் ஆகிய அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து நேற்று நுவ­ரெ­லியா பிர­தான […]

வெற்­றி­ய­டையும் பெண் வேட்­பா­ளர்கள், அடி­மைத்­தனம் துஷ்­பி­ர­யோ­கத்தை இல்­லா­தொ­ழிக்க முன்­வ­ர­வேண்டும்!; பெண்­ணு­ரிமை செயற்­பாட்­டாளர் லோகேஸ்­வரி வலி­யு­றுத்து

(காரை­தீவு நிருபர் சகா) உள்­ளூ­ராட்­சி­ மன்­றத்­தேர்­தலில் கள­மி­றக்­கப்­பட்ட பெண்­வேட்­பா­ளர்­க­ளுக்கே தெரிவில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும் என சர்­வ­தேச பெண்­ணு­ரிமைச் செயற்­பாட்­டா­ளரும் வேள்வி அமைப்பின் தேசிய தலை­வியும் மனித அபி­விருத்­தித் ­தா­ப­னத்தின் நிகழ்ச்­சித்­திட்ட இணைப்­பா­ள­ரு­மான திரு­மதி லோகேஸ்­வரி சிவப்­பி­ர­காசம் தெரி­வித்தார். காரை­தீவு பிஸ்­மில்லாஹ் விடு­தியில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர், இம்­முறை 53, 400 வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 8,293 பேர் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.  பல போராட்­டங்­க­ளுக்குப் பின்னர் முதற் தட­வை­யாக பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­பட்­டுள்­ள­தனால் […]