மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா நேற்று  (7 ) காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், வீரகேசரியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். பின்னர் தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இலங்கையில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

காங்­கே­சன்­துறை கடற்­க­ரையில் காணப்­பட்ட பட­கி­லி­ருந்து 2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்கம் மீட்பு: இருவர் கைது!

(பாறுக் ஷிஹான்) காங்­கே­சன்­துறை கடற்­கரைப் பகு­தியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்­கட்­டுக்­களை கடற்­ப­டை­யினர் கைப்­பற்­றி­ய­துடன் சந்­தே­கத்தின் பேரில் இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். நேற்­று முன்­தினம் மாலை சந்­தே­கத்­துக்கு இட­மாக படகு ஒன்று காணப்­ப­டு­வ­தாக கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து குறித்த படகை கடற்­ப­டை­யினர் சோத­னை­யிட்­டுள்­ளனர். இதன் போது அந்தப் படகில் இரு பொதி­களில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 37 தங்க பிஸ்­கட்­டுக்கள் மீட்­க­பட்­டுள்­ள­துடன் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அத்­துடன் அப்­ப­டகில் மீட்­கப்­பட்ட தங்க பிஸ்­கட்­டுக்கள் தெல்­லிப்­ப­ழையில் உள்ள சுங்க […]

பொலிஸ் நிலை­யத்தில் மது­போ­தையில் கலகம் விளை­வித்த குற்­றச்­சாட்டில் இரு வேட்­பா­ளர்கள் கஹ­வத்­தையில் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கஹ­வத்தை பொலிஸ் நிலை­யத்­தினுள் மது­போ­தையில் நுழைந்து கலகம் விளை­வித்த குற்­றச்­சாட்டில் இரு வேட்­பா­ளர்­களை கைது செய்­துள்­ள­தாக கஹ­வத்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கஹ­வத்தை பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்ட இருவரை விடு­தலை செய்­யு­மாறு குறித்த வேட்­பா­ளர்கள் இரு­வரும் கலகம் செய்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கொழும்­பி­லி­ருந்து ஹம்­பாந்­தோட்டை நோக்கிப் பய­ணித்த அம்­ப­லாந்­தோட்டை டிப்­போ­வுக்கு உரித்­தான பஸ்­ஸொன்றின் நடத்­து­நரை தாக்­கிய சம்­பவம் தொடர்பில் நேற்­று­முன்­தினம் இரவு இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அதன்­பின்னர் இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் இருவர் கஹ­வத்த […]

துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு முயற்­சித்­த­வரை கோடரியால் தாக்கி கொலை செய்த பெண்!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கலென்­பிந்­து­னு­வெவ – துடு­வெவ பிர­தே­சத்தில் பெண் ஒரு­வரை பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்த முயன்ற நபர் ஒருவர் கோடரித் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கலென்­பிந்­து­னு­வெவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்­நபர் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் துடு­வெவ 9 ஆம் பிரி­வி­லுள்ள வீடொன்­றுக்குள் மது­போ­தையில் அனு­ம­தி­யின்றி நுழைந்து. அவ்­வீட்­டினுள் தனி­மை­யி­லி­ருந்த பெண் ஒரு­வரை பலாத்­கா­ர­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்­றுள்ளார் என்றும் அந்­ந­பரின் பாலியல் தொல்­லை­யி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக வீட்­டி­லி­ருந்த கோட­ரி­யினால் அவ்­வீட்­டி­லி­ருந்த பெண் அந்­ந­பரைத் தாக்­கி­யுள்­ள­தா­கவும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் […]

வெளி­வி­வ­கார அமைச்­சினால் இடைநிறுத்தப்பட்ட இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­லய பாது­காப்பு ஆலோ­ச­கரை மீண்டும் பத­வியில் அமர்த்­து­மாறு ஜனா­தி­பதி உத்­த­ரவு!

(ரெ.கிறிஷ்­ணகாந், இரோஷா வேலு) பிரித்­தா­னி­யா­வி­லுள்ள இலங்கை உயர் ஸ்­தா­னி­க­ரா­லா­யத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றிய நிலையில் அப்­ப­த­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட பிரி­கே­டியர் பிரி­யங்­கர பெர்­னாண்­டோவை உடன் அமு­லுக்கு வரும்­வ­கையில் மீண்டும் பத­வியில் அமர்த்­து­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக இரா­ணுவப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இலங்­கையில் நடை­பெற்ற 70 ஆவது சுதந்­திர தினக்கொண்டாட்­டங்­க­ளுக்கு எதி­ராக லண்­ட­னி­லுள்ள இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துக்கு முன்­பாக தமி­ழர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அச்­சந்­தர்ப்­பத்தில் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­தி­லுள்ள இலங்கை பிர­தி­நி­திகள் சிலர் […]