ஒற்றையாட்சியில் கை வைக்க வேண்டாம் அரசாங்கத்துக்கு மக்கள் கடும் எச்சரிக்கை – தேசிய முன்னணியின் தலைவர் விமல்

(எம்.சி.நஜிமுதீன்) உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­க­ளுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்யும் தேர்­த­லாக மாத்­திரம் இத் ­தேர்­தலை மக்கள் கரு­த­வில்லை. மாறாக ஒற்­றை­யாட்சி மீது கை வைக்க வேண்டாம், சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வர வேண்டாம், எட்கா உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திட வேண்டாம் என்­கின்ற பல­மான அழுத்­தத்­தையே மக்கள் இத்­ தேர்தல் மூலம் அர­சாங்­கத்­துக்கு வழங்­கி­யுள்­ள­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்ல நெலும்­மா­வத்­தை­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன […]

தேர்தலில் வரலாறு காணாத வெற்றி, அரசாங்கம் பதவி விலகவேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பு

(எம்.சி.நஜி­முதீன்) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன 6000க்கும் அதி­க­மான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. இவ்­வெற்­றி­யா­னது வர­லாறு காணாத வெற்­றி­யாகும். இதன்­மூலம் அர­சாங்­கத்­துக்­கான மக்கள் ஆத­ரவு இல்­லாது போயுள்­ளது. ஆகவே, அர­சாங்கம் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு ­செய்த ஊட­­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­­முல்ல நெலும்­மா­வத்­தை­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­­­­மை­­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­­கொண்டு உரை­யாற்­று­கை­யி­­லேயே அவர் இதனைத் […]

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்; தமிழ் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம் – நாமல் ராஜபக் ஷ

மக்கள் தமது ஆணை எது என்பதை தெளிவாக வெளிப்­படுத்தி யுள்ளதால், நாடாளு­மன்­றத் தேர்­தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பி­னர் நாமல் ராஜபக் ஷ தெரி­வித்துள் ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சி அதிக சபை­களை வென்ற நிலை­யில் சமூக வலைத்­தளங்களில் நாமல் ராஜபக் ஷ மேற்­கண்டவாறு தெரிவித்துள்ளார். மக்கள் தாம் முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆணை எது என்­பதை தெளிவாகவும் உரத்தும் தெரிவித்­துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலிலே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி […]

71 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவில் நேற்று 71 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. சராடோவ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அன்டனோவ் என் 148 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் மொஸ்கோ நகரிலிருந்து ஓர்ஸ்க் நகரை நோக்கி புறப்பட்டு சில நிமிடங்களில் வீழ்ந்தது. இவ்விமானத்தில் 65 பயணிகள் இருந்தனர். இச்சம்பவத்தில் எவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என ரஷ்யாவின் அவசர சேவைப் பிரிவைச் சேர்ந்த வட்டாரமொன்று தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபை தவிர்ந்த ஏனைய 11 சபைகளையும் ஆட்சி செய்யும் – – ஆறுமுகன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நுவ­ரெ­லியா மாவட்டத்தில் நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளையும் ஆட்சி செய்யும். 13 வரு­டங்­க­ளுக்கு பின்­பாக கொட்­ட­கலை பிர­தேச சபையை ஆட்சி செய்­வதில் பெரு­மி­த­ம­டை­வ­தாக நுவ­ரெ­லியா மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார். ஹட்டன் நக­ரத்தில் நேற்று நடை பெற்ற தேர்தல் வெற்­றிக்­கான மக்கள் ஒன்றுகூடலில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் […]