குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் பாதிப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட டிக்­கோயா மணிக்­க­வத்தை தோட்­ட­ப­கு­தியில் இன்று கொழுந்து பறித்துக் கொண்­டி­ருந்த 12 பேர் குளவி கொட்­டுக்கு இலக்­காகி டிக்­கோயா மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர் . பாதிக்­கப்­பட்ட அனை­வரும் பெண் தொழி­லா­ளர்­க­ளாவர். இவர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்­டி­ருந்த போது மரம் ஒன்­றி­லி­ருந்த குளவிக் கலைந்து கொட்­டி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக டிக்­கோயா கிளங் கன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

கட்டடம் இடிந்ததால் 7 பேர் பலி; கிராண்ட்பாஸில் சம்பவம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) கொழும்பு கிராண்ட்­பாஸில் நேற்று கட்­டடம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் ஏழு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர். கிராண்ட்பாஸின் பிரிடோ பபா­புள்ளே வீதியில் அமைந்­துள்ள தேயி­லைதூள் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பழை­மை­யான கட்­டட சுவர் நேற்று பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் திடீ­ரென இடிந்து வீழ்ந்­தது. இதன்­போது, இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்டு இருவர் ஸ்தலத்­தி­லேயே பலி­யா­ன­துடன் மேலும் 7 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அம்­பி­யூலன்ஸ் மூலம் அழைத்­துச்­செல்­லப்­பட்­டனர். இவர்­களில் ஐவர் சிகிச்சைப் பல­னின்றி உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து […]

தேர்தலில் தேசியக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றி பெறலாம் என்ற பலரின் கனவு இன்று பகல் கனவாகி விட்டது! – மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன்

(தல­வாக்­கலை பி.கேதீஸ்) “இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இந்­திய வம்­சா­வளி மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுத்த பெருமை இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸுக்கு மட்­டுமே உண்டு. மக்­களை தூண்­டி­விட்டு காலத்தை வீண­டிக்­காமல் அர­சியல் சாணக்­கி­யத்தின் மூலம் பல சாத­னை­களை புரிந்து மலை­யக சமூ­கத்தை தலை­நி­மிர வைத்­தவர் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளர் ­ஆ­று­முகன் தொண்­டமான்” என மத்­திய மாகாண விவ­சாய மற்றும் இந்து கலா­சார அமைச்சர் மரு­த­பாண்டி ரமேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊடக சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு […]

காத்தான்குடி நல்லாட்சி அலுவலகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்! என் மீது பழி சுமத்துவதற்கான செயலாக இருக்கலாமென சந்தேகிக்கிறேன் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

(காங்கேயனோடை நிருபர்) அமை­தியை சீர் குலைக்கும் விட­யங்­களில் எவரும் ஈடு­படக் கூடாது என இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பிராந்­திய அலு­வ­ல­கத்தின் மீது நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், “நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­குடி காரி­யா­ல­யத்­துக்கு குண்டு வீசப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. உட­ன­டி­யாக நான் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரியை தொடர்பு கொண்டு அச் சம்­பவம் தொடர்பில் கடு­மை­யான நட­வ­டிக்கை […]

திருமணம் செய்யும் காதலர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க அமெரிக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு

அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகர விமான நிலை­ய­மா­னது காத­லர்­க­ளுக்கு விரை­வாக திரு­மணச் சான்­றி­தழ்­களை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. இன்று கொண்­டா­டப்­படும் காதலர் தினத்தை முன்­னிட்டு லாஸ் வேகாஸ் விமான நிலையம் இந்த அறி­விப்பை விடுத்­துள்­ளது. கேளிக்கை விடு­தி­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற லாஸ் வேகாஸ் நக­ரத்தில் திரு­மண சான்­றி­தழ்­களைப் பெறு­வது இல­கு­வா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­ற­து. இதனால், உலகின் திரு­மணத் தலை ­ந­கரம் என்று லாஸ் வேகாஸ் நகரம் வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், லாஸ் வேகாஸில் திரு­ம­ணங்­களைப் பதிவு செய்யும் கிளார்க் கவுன்ரி […]