சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்குச் சென்ற 27 பேரி­ட­மி­ருந்து போதைப் பொருட்­களை கண்டு பிடித்த மோப்ப நாய்!

(க.கிஷாந்தன்) சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு சென்று கொண்­டி­ருந்த 27 பேரி­ட­மி­ருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை­ப்பொ­ருட்கள் சனிக்­கி­ழமை இரவு ஹட்டன் குற்­றத்­த­டுப்பு விசேட பிரி­வி­னரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உத­வி­யுடன் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.- பிலி­யந்­தலை, கெஸ்­பேவ, களுத்­துறை, ஹோமா­கம மற்றும் கொழும்பு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ ம­லை­யினை தரி­சிப்­ப­தற்­காக சென்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்தே மேற்­படி கஞ்சா பக்கெட்­களும், ஹெரோயின் பக்கெட்­களும், கைப்­பற்­றப்­பட்­டன. ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியில் கினி­கத்­தேனை திய­க­லவில் சனிக்­கி­ழமை இரவு வாக­னங்­களை சோத­னை­யிட்ட போதே இவை கைப்­பற்­றப்­பட்­டன. இதன்­போது 8 […]

கற்­பிட்டி கண்­டக்­கு­ளியில் கடற்­கரை பிர­தே­சத்தில் பெருந்­தொகை அமோ­னியம் க்ளைபோசேட் மீட்பு

(மது­ரங்­குளி நிருபர்) கற்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கண்­டக்­குளி கடற்­க­ரையை அண்­டிய பகு­தியில் உள்ள காணி ஒன்­றி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான தடை செய்­யப்­பட்ட அமோ­னியம் க்ளைபோசேட் பக்­கெட்­டுக்­களை மீட்­டுள்­ள­தாக கல்­பிட்டி பொலிஸார் தெரி­வித்­தனர். கற்­பிட்டி பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் ­பெற்ற இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு­வினர் பொதி செய்­யப்­பட்ட நிலையில் காணப்­பட்ட தலா 100 கிராம் நிறை கொண்ட 7142 அமோ­னியா க்ளைபோசேட் பக்­கெட்­களை மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த அமோ­னியம் க்ளைபோசேட் பக்­கெட்­டுகள் இந்­தி­யா­வி­லி­ருந்து கடல் […]

பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக கூடைக்குள் ஒளிந்துகொள்ள முற்பட்ட பெண்

பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக தனது உடலின் மேல் பகு­தியை சலவைத் துணிக் கூடை­யொன்­றினால் மறைத்­துக்­கொண்­டி­ருந்த பெண்­ணொ­ருவர் இங்­கி­லாந்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். வழக்கு விசா­ர­ணை­யொன்­றுக்­காக நீதி­மன்றில் ஆஜ­ரா­காத பெண்­ணொ­ரு­வரை இங்­கி­லாந்தின் டேர்­பி­ஷயர் பிராந்­திய பொலிஸார் தேடிச் சென்­றனர். தனது வீட்­டுக்குள் பொலிஸார் வரு­வதை உணர்ந்த அப்பெண், அவ­ச­ர­மாக ஒளிந்­து­கொள்ள முற்­பட்டார். வீட்­டி­லி­ருந்த சலவைத் துணிக் கூடை­யொன்றை தனது தலைக்கு மேல் கவிழ்த்­துக்­கொண்டு அப்பெண் சுவர் ஓர­மாக நின்று கொண்­டி­ருந்தார். அப்­பெண்ணின் உடலின் பகுதி வெளியே தெரிந்­தது. இப்­படி நின்றால் பொலிஸார் […]

ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாக கூறப்­படும் அதிபர் உள்­ளிட்டோர் பய­ணித்த வேன் பள்­ளத்தில் வீழ்ந்து விபத்து- இருபெண்கள் உட்­பட நால்வர் காயம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாகக் கூறப்­படும் அதிபர் உள்­ளிட்ட குழு­வினர் பய­ணித்த வேன் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக சம­ன­ல­வெவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் அதிபர் ஒருவர் மண்­டி­யி­டப்­பட்ட சம்­பவம் தொடர்­பான சாட்­சிய விசா­ர­ணை­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட அதிபர் கடந்த 15 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­துக்கு மேலும் 6 பேருடன் சென்­றுள்ளார். பிர­தான சாட்­சி­யா­ள­ரான அதி­பரை ராகமை­யி­லுள்ள அவ­ரது உற­வினர் ஒரு­வரின் வீட்டில் இறக்கி விட்­டதன் பின்னர் அவ­ருடன் கொழும்­புக்கு வந்­தி­ருந்த […]

தனது போட்டிகளை மலேஷியாவில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்சி

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்­துடன் பாகிஸ்தான் அணி விளை­யா­ட­வுள்ள போட்டிகளை மலே­ஷி­யாவில் நடத்­து­வ­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்­சிக்­கி­றது. இது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக அச்­ச­பையின் தலைவர் நஜாம் சேத்தி தலை­மை­யி­லான குழு­வினர் மலே­ஷி­யா­வுக்குச் செல்­ல­வுள்­ளனர். பாகிஸ்­தானின் லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அணியின் வாகனத் தொட­ரணி மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சர்­வ­தேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­வதில் தயக்கம் காட்டி வரு­கின்­றன. இலங்கை அணி அண்­மையில் பாகிஸ்­தானில் விளை­யா­டிய போதிலும் அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து முத­லான […]