1990: காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் 103 முஸ்­லிம்கள் படு­கொலை

வரலாற்றில் இன்று….

ஓகஸ்ட் – 03

 

1492 :  மேற்குத் திசை வழி­யாக சென்று இந்­தி­யாவை அடை­வ­தற்­கான முயற்­சி­யாக, ஸ்பெயி­னை­விட்டு கொலம்பஸ் புறப்­பட்டார்.


Varalaru--21492 : ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர்.


1645 : முப்­ப­தாண்டுப் போர்: ஜேர்­ம­னியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேர­ரசுப் படை­களைத் தாக்கி வெற்றி பெற்­றன.


1783 : ஜப்­பானில் அசாமா எரி­மலை வெடித்­ததில் 35,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1858 : இலங்­கையின் முத­லா­வது ரயில்­பாதை நிர்­மாணப் பணியை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்­பித்து வைத்தார்.


1860 : நியூ­ஸி­லாந்தில் இரண்­டா­வது மாவோரி போர் ஆரம்­ப­மா­னது.


1936 : ஜேர்­ம­னியின் பேர்லின் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களின் 100 மீற்றர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க கறுப்­பின வீர­ரான ஜெஸி ஒவென்ஸ் முத­லிடம் பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்­டி­களில் அவர் மொத்­த­மாக 4 தங்கப் பதக்­கங்­களை வென்றார்.


1914 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸ் மீது ஜேர்­மனி போர் தொடுத்­தது.


varalaru-11940 : இரண்டாம் உலகப் போரில்,  பிரித்­தா­னிய சோமா­லி­லாந்து மீது இத்­தாலி போர் தொடுத்­தது.


1949 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் தேசிய கூடைப்­பந்து சங்கம் அமைக்­கப்­பட்­டது.


1960 : பிரான்­ஸிடம் இருந்து நைஜர் சுதந்­திரம் பெற்­றது.


1975 : மொரோக்­கோவில் விமானம் ஒன்று மலை ஒன்­றுடன் மோதி­யதில் 188 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1990 :  காத்­தான்­குடி  பள்­ளி­வா­சல்­களில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் 103 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர்.


2005 : மௌரித்­தே­னி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் ஜனா­தி­பதி மாவோயா ஊல்ட் தாயா, பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


2005 : ஈரா­னிய ஜனா­தி­ப­தி­யாக மஹ்மூத் அஹ்­ம­டி­நெஜாத் தெரி­வானார்.


2010 : பாகிஸ்­தானின் கராச்சி நகரில் இடம்­பெற்ற வன்முறைகளினால் 85 பேர் கொல்லப்பட்டனர்.


2014 : சீனாவின் யுனான் மாகா­ணத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 617 பேர் கொல்லப்பட்டனர்.

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro