1990 : குவைத்தை தனது மாகாணம் என ஈராக் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 08

 

1768 : பிரித்­தா­னிய கட­லோடி ஜேம்ஸ் குக் தனது கடற்­ப­ய­ணத்தை பிளை­ம­வுத்தில் இருந்து ஆரம்­பித்தார்.


1848 : மாத்­தளை கிளர்ச்சி: இலங்­கையில் பிரித்­தா­னி­ய­ருக்கு எதி­ராக கிளர்ச்சி செய்த வீர­புரன் அப்­பு­வுக்கு தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1863 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: டென்­ன­ஸியின் இரா­ணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்சன் தனது தனிப்­பட்ட அடி­மை­களை விடு­வித்தார். இந்நாள் 20ம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் டென்­ன­ஸியின் கறுப்­பின அமெ­ரிக்­கர்­க­ளினால் விடு­மு­றை­யாகக் கொண்­டா­டப்­பட்­டது.


kuwit1908 : வில்பர் ரைட் தமது முத­லா­வது வான்­ப­ய­ணத்தை பிரான்ஸின் “லே மான்ஸ்" என்ற இடத்தில் மேற்­கொண்டனர். ரைட் சகோ­தர்­களின் முத­லா­வது பகி­ரங்க விமானப் பறப்பு இது­வாகும்.


1942 : இந்­திய காங்­கிரஸ் பம்­பாயில் கூட்­டிய மாநாட்டில் "வெள்­ளை­யனே வெளி­யேறு" எனும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.


1945 : ஐநா சாசனம் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. ஐநாவில் இணைந்த மூன்­றா­வது நாடு இது­வாகும்.


1947: பாகிஸ்­தானின் தேசியக் கொடி அங்­கீ­காரம் பெற்­றது.


1963: இங்­கி­லாந்தில் இடம்­பெற்ற பாரிய ரயில் கொள்­ளையில் 15 பேர­டங்­கிய கொள்­ளையர் குழு 2.6 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தைக் கொள்­ளை­ய­டித்­தது.


1967: ஆசியான் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.


1973 : தென் கொரிய அர­சி­யல்­வாதி (பின்னர் தென் கொரிய ஜனா­தி­ப­தி­யா­னவர்) கின் டாய்-ஜுங் கடத்­தப்­பட்டார்.


1974 : வோட்­டர்கேட் ஊழல் விவ­காரம் கார­ண­மாக ஐக்­கிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்சன் தனது பத­வியைத் துறப்­ப­தாக அறி­வித்தார்.


1989 : ஓர் இர­க­சிய இரா­ணுவ விண்­வெளித் திட்­டத்தை முன்­னெ­டுத்து நாசா, கொலம்­பியா விண்­ணோ­டத்தை விண்­ணுக்கு அனுப்­பி­யது.


1990 : குவைத்தை தனது ஒரு மாகா­ண­மாக ஈராக் இணைத்துக் கொண்­டது.


1992 : யாழ்ப்­பாணம், அரா­லியில் இடம்­பெற்ற கண்­ணி­வெடித் தாக்­கு­தலில் இலங்கை இரா­ணு­வத்தின் வட பிராந்­தியத் தள­பதி டென்ஸில் கொப்­பே­க­டுவ கொல்­லப்­பட்டார்.


2007 : நாசா விண்­வெளி ஆய்வு மையம், என்­டெவர் விண்­க­லத்தை கிறிஸ்­டினா மெக்­காலீப் என்ற ஆசி­ரியர் உட்­பட ஏழு விண்­வெளி வீரர்­க­ளுடன் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­திற்கு கென்­னடி விண்­வெளி மையத்தில் இருந்து வெற்­றி­க­ர­மாகச் செலுத்­தி­யது.


2008 : 29 ஆவது கோடைக்­கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் ஆரம்­ப­மா­கி­யது.


2010 : சீனாவில் வெள்­ளத்­தினால் 1400 பேர் இறந்­தனர்.


2013 : பாகிஸ்­தானின் குவேட்டா நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 31 பேர் இறந்­தனர்.


2016 : பாகிஸ்­தானின் குவேட்டா நகர வைத்­தி­ய­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் 70 இற்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­த­துடன் 130 பேர் காயமடைந்தனர்.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro