57 கோடி ரூபா கடனை செலுத்­தாமல் தப்­பு­வ­தற்­காக பிளாஸ் ரிக் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் முகத்தை மாற்­றிய பெண்

சீனாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தான் வாங்­கிய கடன் தொகையை செலுத்­தாமல் தப்­பு­வ­தற்­காக பிளாஸ் ரிக் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் தனது முகத் தோற்­றத்தை மாற்­றிக்­கொண்ட நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


plastic_surgery_face59 வய­தான இப்பெண் ஸு நஜூவான் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இவர் 25 மில்­லியன் சீன யுவான் (சுமார் 57 கோடி இலங்கை ரூபா) பணத்தை கட­னாகப் பெற்­றி­ருந்தார் எனவும், அத்­தொ­கையை அவர் திருப்பிச் செலுத்தத் தவ­றி­விட்டார் எனவும் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டி­ருந்­தது.


குறித்த கடனை ஸு நஜுவான் திருப்பிச் செலுத்த வேண்டும் என வுஹான் நக­ரி­லுள்ள நீதி­மன்­ற­மொன்று உத்­த­ர­விட்­டி­ருந்­தது. அதை­ய­டுத்து, மேற்­படி பெண் தப்பிச் சென்­றி­ருந்தார். 


அப்­பெண்ணை தேடி வந்த பொலிஸார், அண்­மையில், அவரின் இருப்­பி­டத்தை கண்­ட­றிந்­தனர். எனினும், அவரைக் கண்­ட­வுடன் தாம் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


''அப்பெண் 30 வய­தா­ன­வரைப் போன்று காணப்­பட்டார். அவரின் முகத்­தோற்­றத்­துக்கும் எம்­மி­ட­மி­ருந்த அவரின் புகைப்­ப­டங்­க­ளி­லி­ருந்த தோற்­றத்­துக்கும் பாரிய வித்தியாசங்கள் இருந்தன'' என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தான் சீனாவின் பல பகுதிகளிலும் ரயிலில் பயணம் செய்ததாகவும், ஸு நஜூவான் ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 192 times, 1 visits today)

Post Author: metro