‘நானும் மனோஜும் இணைந்தே பொலிஸாரை வெட்டினோம்’ – சம்பவம் திட்டமிடப்பட்டதல்ல; ஆவா தலைவர் வாக்குமூலம்

(எம்.எப்.எம்.பஸீர்)


ஆவா குழு­வி­லி­ருந்து என்­னுடன் முரண்­பட்­டுக்­கொண்டு வேறு குழுவை உரு­வாக்கச் சென்ற தனு ரொக் என்­ப­வரை வெட்­டவே நாம் சென்றோம். அவ­ரது வீட்டில் அவர் இருக்­க­வில்லை. இதனால் நாம் மீள திரும்ப முற்­பட்ட போது  பொலிஸார் மோட்டார் சைக்­கிளில் வரு­வதை அவ­தா­னித்தோம்.


Ava-Victorஅவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்­கவே வரு­வ­தாக எண்­ணியே அவர்­களை பின் தொடர்ந்து துரத்திச் சென்று நானும் மனோஜும் சேர்ந்தே அவர்­களை தொடர்ச்­சி­யாக வெட்­டினோம் என  பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.


வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் நேரடி மேற்­பார்­வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் கட்­டுப்­பாட்டில் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி காமினி ஹேவா­வித்­தா­ரண தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்ள சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.


இந்­நி­லையில்  தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள விக்டர் உள்­ளிட்ட ஆறு சந்­தேக நபர்­க­ளி­டமும்  ஆவா குழுவின் பின்­னணி,  அதற்­காக நிதிப் பங்­க­ளிப்பை வழங்­குவோர் குறித்து விரி­வாக விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தா­கவும், அக்­கு­ழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 

இந்­நி­லையில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள மேலும் மூவரைக் கைது செய்ய தொடர்ச்­சி­யாக ஏற்­க­னவே அமைக்­கப்­பட்ட பொலிஸ் குழுக்கள் தேடு­தல்­களை நடத்­து­வ­தா­கவும் அவர்­களை விரைவில் கைது செய்ய எதிர்­பார்ப்­ப­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.


ஆவா குழுவின் உறுப்­பி­னரும் பொலிஸார் மீது தாக்­குதல் நடாத்­தி­யவர் என அடை­யாளம் காணப்­பட்­ட­வ­ரு­மான யாழ். கொக்­குவில் கிழக்கு பகு­தியைச் சேர்ந்த சிவ­சுப்­ர­ம­ணியம் போல் என்­ப­வரை மட்­டக்­கு­ளியில் வைத்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் இரு நாட்­க­ளுக்கு முன்னர் கைது செய்­தனர்.


இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவரை  கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத  புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யது.

 

இதன் போதே ஆவா குழுவை தற்­போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறி­யப்­படும் யாழ். திரு­நெல்­வேலி பகு­தியைச் சேர்ந்த சத்­தி­யவேல் நாதன் நிஷாந்தன் என்­பவர் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இத­னை­ய­டுத்தே நேற்று முன்­தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்­ப­டுத்திக் கொண்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் புறக்­கோட்டை பஸ் நிலை­யத்தில் வைத்து அவ­ரையும், அவ­ருடன் இருந்த யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த வினோத் எனப்­படும்  ராஜ்­குமார் ஜெய­கு­மா­ரையும், மனோஜ் எனப்­படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.


 அத்துடன் யாழில் வைத்து  இணுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த  அர்ஜுனன் பிரசன்ன ஆகியோரையும் கைது செய்தனர்.

(Visited 182 times, 1 visits today)

Post Author: metro