இலங்­கையில் பிறந்த குழந்­தை­களில் அதி­கூ­டிய நிறை­கொண்ட குழந்தை பலப்­பிட்­டியில் பிறப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)


இலங்­கையில் இது­வ­ரையில் பிறந்த குழந்­தை­க­ளி­லேயே அதி­கூ­டிய நிறை­கொண்ட குழந்தை நேற்று முன்­தினம் காலி பல­பிட்­டி­யவில் பிறந்­துள்­ளது. இது­வரை உலகில் பிறந்­துள்ள அதிக எடை கொண்ட குழந்­தை­க­ளுக்­கான கின்னஸ் சாதனை பட்­டி­யலில் 13.1 இறாத்தல் (5,94 கிலோ கிராம்) நிறை­யுடன் பிறந்த இக்­கு­ழந்தை 11 ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.

Baby

‍ஹொர­வல ஹம்­பு­ரு­கல  நதீஷா நில்­மினி என்ற பெண்­ணொ­ரு­வரே இலங்­கையில் அதி­கூ­டிய நிறை­யு­டைய குழந்­தையை பிர­ச­வித்­துள்ளார்.  


Baby1பலப்­பிட்­டிய ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய நிபுணர் கபில விதா­னாச்சி மற்றும் வைத்­தியர் தமித நளின் உள்­ளிட்ட வைத்­திய குழு­வினர் முயற்­சி­யினால் சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்­சையின் மூல­மாக இக்­கு­ழந்தை பிர­ச­விக்­கப்­பட்­டுள்­ளது.


தான் கரு­வுற்று 6 தொடக்கம் 7 ஆவது மாத காலப்­ப­கு­தியில் வயிற்­றிலுள்ள குழந்தை நிறை அதிகம் என அறிந்து கொண்­ட­த­னை­ய­டுத்து வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னையை பின்­பற்­றி­வந்­த­மை­யினால் குழந்­தையை இல­குவில் பிர­ச­விக்க முடிந்­த­தாக குழந்­தையின் தாய் நதீஷா தெரி­வித்­துள்ளார்.


Baby0இதே­வேளை,  இது­வ­ரையில் உலகில் பிறந்­துள்ள அதி­கூ­டிய நிறை ­கொண்ட குழந்­தைகள் பட்­டி­யலில் முதல் பத்து இடங்­களில்  22  இறாத்தல் (9,97 கி.கிராம்) நிறை­யுடன் பிறந்த இத்­தாலி மற்றும்  அமெ­ரிக்கா ஆகிய நாடு­களை சேர்ந்த இரு குழந்­தைகள் முதல் இரு இடங்­களைப் பெற்­றுள்­ளன.


அத்­துடன் இப்­பட்­டி­யலில் 19 இறாத்தல் (8, 61கி.கிராம்) கொண்ட ஒரு குழந்தை 17 இறாத்தல் (7,71 கி.கிராம்) நிறை­கொண்ட இரு குழந்­தைகள் 16 இறாத்தல் (7, 25) நிறை­யு­டைய மூன்று குழந்­தைகள் மற்றும் 15 இறாத்தல் ( 6,8 கி. கிராம்) நிறை­கொண்ட இரு குழந்­தைகள் என்­பன அடுத்­த­டுத்த இடங்­களை பிடித்­துள்­ளன.


இவற்­றுக்கு அடுத்­த­ப­டி­யா­கவே இலங்­கையில் பிறந்த இக்­கு­ழந்தை 11 ஆவது இடத்தை பிடித்­துள்­ளது. தாயும் சேயும் தற்­ச­மயம் நல­மாக இருப்­ப­தா­கவும் இது தமக்கு கிடைத்­த­வொரு புதிய அனு­பவம் எனவும் பலப்­பிட்டி ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 124 times, 1 visits today)

Post Author: metro