2001 : அங்கோலாவில் ரயில் மீதான தாக்குதலில் 252 பேர் பலி!

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 10

 

1519 : போர்த்துக்கேய கடலோடி ஆய்வாளர் மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர ஸ்பெய்னின் செவில் நகரில் இருந்து புறப்பட்டன.


1675 : ரோயல் கிறீன்விச் விண்வெளி கண்காணிப்பகத்துக்கான அடிக்கல் லண்டனில் நடப்பட்டது.


1680 : அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கு எதிராக புவெப்லோக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.


varalru1776 : அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன செய்தி லண்டனை சென்றடைந்தது.


1792 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.


1809 : குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக பிரகடனம் செய்தது.


1904 : ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.


1913 :  பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொன்டெனேகுரோ, கிறீஸ் ஆகிய நாடுகள் புக்காரெஸ்ட் நகரில் சமாதான உடன்பாட்டுக்கு இணங்கின.


 1944 : இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.


1990 : மகெலன் விண்கலம் வெள்ளி கிரகத்தை  அடைந்தது.


2000 : உலக மக்கள் தொகை 6 கோடியை கடந்தது.


2001: அங்கோலாவில் பயணிகள் ரயில் ஒன்றின் மீதான தாக்குதலில் 252 பேர் உயிரிழந்தனர். 


2003 : ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் புரிந்த முதலாவது மனிதரானார். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்த மலென்சேன்கோவுக்கும் அமெரிக்காவில் இருந்த திமித்ரிவாவுக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது.


2012 : தென் ஆபிரிக்காவின் பேர் நகருக்கு அருகில் சுரங்கத் தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது.


2014 : ஈரானின் தெஹ்ரான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதிலிருந்த 48 பேரில் 39 பேர் உயிரிழந்தனர்.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro