சலட் தருமாறு கேட்ட சைவ உணவுப் பிரியையான யுவதிக்கு தக்காளியும் வெங்காயமும் மாத்திரம் வழங்கிய உணவகம்

salad-2சைவ உணவு மாத்திரம் உட்கொள்ளும் யுவதி ஒருவர், ஸ்பானிய உணவு விடுதியொன்றில் சலட் கேட்டபோது, தனக்கு வழங்கப்பட்ட உணவைப் பார்த்து பெரும் வியப்படைந்தார். வெட்டப்பட்ட தக்காளியும், வெங்காயமும் மாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டமையே இதற்குக் காரணம்.


இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோர்ஜியானா ஜார்விஸுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. 19 வயதான ஜோர்ஜியானா தாவர உணவு மாத்திரம் உட்கொள்பவர். 


ஸ்பெய்னின் மலாகா நகருக்கு அண்மையில் இவர்  தனது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டிருந்தார். ஓர் உணவு விடுதியொன்றை அடைந்தவுடன் அங்கு தாவர உணவு கிடைக்குமா என ஜோர்ஜியானாவின் தந்தை கேட்டாராம். ‘‘கிடைக்கும்” என உணவு விடுதி ஊழியர் பதிலளித்தார்.


முதலில் இவர்கள் ஜோர்ஜியானாவுக்காக வெஜிட்டேரியன் பீட்ஸா கேட்டனர். ஆனால், அதில் முட்டை கலந்திருப்பதாகவும் அதற்குப் பதிலாக சலட் உணவை உட்கொள்ளலாம் எனவும் ஊழியர் பதிலளித்தார்.


சிறிது நேரத்தின் பின்னர், ஜோர்ஜியானாவுக்கு முன்னால் பச்சை வெங்காயமும் தக்காளியும் ஒரு தட்டில் வைக்கப்பட்டதைப் பார்த்து தானும் ஜோர்ஜியானாவும் சிரித்துவிட்டதாக ஜோர்ஜியானாவின் தங்கை கெபி ஜார்விஸ் கூறியுள்ளார்.
 

(Visited 156 times, 1 visits today)