ஆற்றில் மீன்பிடிக்க வீசிய வலையில் சிக்கிய நான்கு மோட்டார் குண்டுகள்

(தோப்பூர் நிருபர்)

 
திரு­கோ­ண­மலை வான்­எல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வான் ஆற்­றி­லி­ருந்து எம்.60 ரக மோட்டார் குண்­டுகள் நான்கு மீட்­கப்­பட்­டுள்­ள­தாக வான்­எல பொலிஸார் தெரி­வித்­தனர்.

Bomb

வான்­ஆற்றுப் பகு­தியில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை மீன்­பி­டித்துக் கொண்­டி­ருந்த மீனவர் ஒரு­வரின் வலையில் மோட்டார் குண்­டொன்று சிக்­கி­யுள்­ளது.


இது  தொடர்­பாக  குறித்த மீனவர் வான்­எல பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து குறித்த ஆற்றுப் பகு­தியில் பொலிஸார் தேடுதல் நடத்­திய போது மேலும் மூன்று மோட்டார் குண்­டுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.


கந்­தளாய் நீதிவான் நீதி­மன்ற அனு­ம­தியை பெற்று சூரி­ய­புர விசேட அதி­ர­டிப்­ப­டையின் உத­வி­யுடன் நான்கு மோட்டார் குண்­டு­க­ளையும் நேற்று புதன் கிழமை செயலிழக்க செய்யவுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro