உலக மெய்வல்லுநர் அரங்கில் இன்று நிமாலி, நாளை அதிகாலை லக் ஷான் களம் இறங்குவர்

(நெவில் அன்­தனி)


lakshan-dayarathnaலண்டன் ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களின் ஏழாம் நாளன்று இலங்­கையின் இரண்டு மெய்­வல்­லு­நர்கள் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.


பெண்­க­ளுக்­கான தகு­திகாண் 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் நிமாலி லிய­ன­ஆ­ராச்­சியும், ஆண்­க­ளுக்­கான தகு­திகாண் ஈட்டி எறிதல் போட்­டியில் வருண லக் ஷான் தயா­ரட்­னவும் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.


கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற மரதன் ஓட்டப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் அநு­ராத இந்த்­ரஜித் குறேயும், பெண்கள் பிரிவில் ஹிருணி விஜே­ரத்­னவும் இடை­ந­டுவில் வில­கிக்­கொண்­டமை இலங்­கைக்கு பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்­தது.


Nimaliஇந் நிலையில் நிமாலி லிய­ன­ஆ­ராச்சி, வருண லக்ஷான்  ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து அதி­ச­யத்தை எதிர்­பார்க்க முடி­யா­விட்­டாலும் அவர்கள் தத்­த­மது சிறந்த பெறு­தி­களைப் பதிவு செய்ய முயற்­சிப்பர் என நம்­பப்­ப­டு­கின்­றது.


இலங்கை நேரப்­படி இன்று இரவு 11.55 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள பெண்­க­ளுக்­கான தகு­திகாண் 800 மீற்றர் ஓட்டப் போட்­டியின் இரண்­டா­வது கட்­டத்தில் நிமாலி லிய­ன­ஆ­ராச்சி பங்­கு­பற்­ற­வுள்ளார். மொத்தம் ஆறு தகு­திகாண் போட்­டி­களில் தலா 8 பேர் வீதம் 48 வீராங்­க­னைகள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

 

இந்த 48 பேரின் நேரப் பெறு­தி­களின் அடிப்­ப­டையில் 2 நி. 02.58 செக்­கன்கள் என்ற நேரப் பெறு­தி­யுடன் நிமாலி 45ஆவது இடத்தில் இருக்­கின்றார். 


ஆண்­க­ளுக்­கான தகு­திகாண் சுற்றின் பி பிரிவு போட்டி இலங்கை நேரப்­படி இன்று நள்­ளி­ர­வுக்குப் பின்னர் 1.05 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


இப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள வருண லக்ஷான் அண்­மையில் நடை­பெற்ற தகு­திகாண் போட்டி ஒன்றில் ஈட்­டியை 82.19 மீற்றர் தூரம் எறிந்­ததன் மூலம் உலகில் அதி­சி­றந்த 32 வீரர்கள் பட்­டி­ய­லுக்குள் இடம்­பி­டித்தார்.


இன்­றைய போட்­டியில் பங்குபற்ற வுள்ள 32 வீரர்களில் வருண லக் ஷான் 30 ஆம் இடத்தில் இருக்கின்றார். எனவே நிமாலி, வருண ஆகிய இருவரிடமிருந்து பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது.
 

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro