அத்திட்டிய வங்கியின் பாதுகாப்பு அதிகாரி கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலி

(ரெ.கிறிஷ்­ணகாந்)


அத்­திட்­டிய பிர­தேச வங்கி ஒன்றில்  கொள்­ளை­யர்கள் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில்    வங்­கியின் பாது­காப்பு அதி­காரி உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்‍­றொ­ருவர் காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தெற்கு போதனா (களு­போ­வில) வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­கிஸை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.


Deathதுப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்ட சந்­தே­க­ந­பர்கள் இரு­வரும்  வங்­கிக்கு பணம் வைப்­பி­லி­டு­வ­தற்­காக வந்­தி­ருந்த நபர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்த பணத்தில் ஒரு பகு­தியை  கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் வகையில் மோட்­டார்­சைக்­கிளில் வந்த இரு­வரே இவ்­வாறு துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்டு தப்­பிச்­சென்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.


இதே­வேளை,  தெஹி­வளை பிர­தே­சத்­தி­லுள்ள நிதி நிறு­வ­ன­மொன்றில் கொள்­ளை­யி­டு­வ­தற்கு இரு சந்­தே­க­ந­பர்கள் முயற்­சித்­தி­ருந்த போதிலும் முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.


மேற்­படி துப்­பாக்கிப் பிர­யோக சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களே தெஹி­வளை நிதி நிறுவன கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் கல்கி‍ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro