விடைத்தாள்களை ஏற்க பரீட்சை மேற்பார்வையாளர்கள் மறுத்ததால் வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவர்கள்!

(ரெ.கிறிஷ்ணகாந்)


இம்முறை கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில்  பொருளியல் பாட முதலாம் பகுதி பரீட்சையின்போது வினாக்களுக்கு பதிலளித்த 15 பரீட்சார்த்திகளின் ளை மேற்பார்வையாளர்கள் பெற்றுக் கொள்வதற்கு மறுத்துள்ளமை குறித்து பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு 
செய்யவுள்ளதாக அம்மாணவர்களின் பெற்றோர்  தெரிவித்துள்ளனர்.


Exam-01பொலன்னறுவை மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த 15 மாணவர்களே இவ்வாறு சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் மூன்றாவது தடவையாக  பரீட்சைக்குத் தோற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருளியல் பாடத்தின் முதலாம் பகுதி  வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சுருக்க விடை வினாக்களுக்கு அவ்வினாத்தாளிலேயே பதில் எழுதுவதற்கு இடம்கொடுக்கப்பட்டிருந்தது.


எனினும்  மாணவர்கள் இது தொடர்பில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளரிடம் வினவியபோது, குறித்த வினாப்பத்திரத்தில் பல்தேர்வு வினாப்பத்திரத்தினை மாத்திரம் சேகரிப்பதாகவும் சுருக்க விடை கோரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க பயன்படுத்திய பிரத்திதேய விடைத்தாளை மட்டுமே சேகரிப்பதாகவும் வினாத்தாளில் விடையளித்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். 


இதன்காரணம் வினாத்தாளிலேயே விடையளித்த மாணவர்களின் வினாப்பத்திரங்களை பரீட்சை மேற்பார்வை யாளர் ஏற்க மறுத்த காரணத்தினால் அம்மாணவர்கள் தாம் விடையெழுதிய பத்திரங்களை தத்தமது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர்.


இந்நிலையில், இது ‍‍தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர் பரீட்சைத் திணைக்களத்துக் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

(Visited 78 times, 1 visits today)