காதலியை நீரில் மூழ்கடித்து கொலை செய்த முன்னாள் பிக்குவுக்கு மரண தண்டனை!

(ரெ.கிறிஷ்­ணகாந்)


இங்­கி­ரிய,  நாச்­சி­மல நீர்த்­தேக்­கத்தில்  தனது காத­லியை நிர்­வா­ணப்­ப­டுத்தி கொடூ­ர­மாக நீரில் மூழ்­க­டித்துக் கொலை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட முன்னாள் பிக்கு ஒரு­வ­ருக்கு பாணந்­துறை மேல்­நீ­தி­மன்றம் நேற்று மரண தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.


Judgmentபன்­னிப்­பிட்­டி­யவைச்  சேர்ந்த ‍ஹேனே­கமே ரத்­ன­சிறி பிக்கு அல்­லது கொடி­து­வக்கு ஆரச்­சிகே பிர­மில சாரங்க என்ற 34 வயது நப­ருக்கே பாணந்­துறை மேல் நீதி­மன்ற நீதி­பதி பத்­மினி ரண­வக்க குண­தி­லக்க மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.


குற்­ற­வாளி துற­வறம் பூண்­டி­ருந்த நிலையில் பின்னர் அதி­லி­ருந்து விலகி ஆட்டோ செலுத்தி வந்­தி­ருந்த நிலையில் இங்­கி­ரிய பிர­தே­சத்தைச் சேர்ந்த தோன சுனேத்ரா பிரி­ய­தர்­ஷினி என்ற  பெண்­ணுடன் மிகவும் நெருக்­க­மாக காதல் தொடர்பை பேணி­வந்­துள்ளார்.

 

அதன்­போது கொரியா செல்­வ­தற்­காக அவ­ரிடம் பண உத­வி­களை பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் காதல் தொடர்பை இடை­நி­றுத்தி குற்­ற­வாளி தென் கொரி­யா­வுக்கு சென்று அங்கு பணி­யாற்றி 2 வரு­டங்­க­ளுக்கு பிறகு நாடு திரும்­பி­யி­ருந்தார்.


அதன்­பின்னர் மீண்டும் அப்­பெண்­ணுடன் காதல் தொடர்­பு­களை புதுப்­பித்­துக்­கொண்டு அவரை திரு­மணம் செய்து கொள்­வ­தாவும் பெண்ணின் பெற்­றோ­ருக்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

 

இந்­நி­லையில் திரு­ம­ணத்­துக்கு தேவை­யான பொருட்­களை வாங்­கு­வ­தற்கு கொழும்­புக்கு செல்ல வேண்­டி­யுள்­ள­தாக தனது காத­லியை அழைத்துச் சென்ற குறித்த நபர்  கடந்த 2010  மே 25 ஆம் திகதி அவரை நிர்­வா­ணப்­ப­டுத்தி நாச்­சி­மலே நீர்த்­தேக்­கத்தில் மூழ்­க­டித்து கொலை செய்­தி­ருந்தார். இந்நிலையில் மறுநாள் நீர்த்தேக்கத்திலிருந்து அப்பெண்ணின் சடலத்தை மீட்ட இங்கிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரது காதலனை கைது செய்திருந்தனர்.

(Visited 83 times, 1 visits today)

Post Author: metro