இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி விசாரிக்க வேண்டும் என்கிறார் அர்ஜுன

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அடைந்­து­வரும் தொடர்ச்­சி­யான படு தோல்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலை­வரே காரணம் எனவும் இது குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை விசா­ரணை நடத்த வேண் டும் எனவும் உலகக் கிண்ண சம்­பியன் அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

arjuna-ranatunga-1 தேசிய அணியில் முறை­யான கட்­டுப்­பாட்­டு­டன்­கூ­டிய ஒழுங்­கு­முறை இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலை­மைத்­து­வத்தைப் பெறு­வ­தற்­கான புதிய நகர்வில் இறங்­கி­யுள்­ள­தாகக் கரு­தப்­படும் அர்­ஜுன ரண­துங்க ஏ.எவ்.பி.க்குத் தெரி­வித்தார்.

எனினும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் 304 ஓட்­டங்­களால் தோல்வி அடைந்த இலங்கை, இரண்­டா­வது டெஸ்டில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்­டங்­களால் தோல்வி அடைந்­தது. இந்த இரண்டு தோல்­வி­களும் நான்கு நாட்­க­ளுக்குள் இலங்கை சந்­தித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இங்­கி­லாந்தில் நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் முதல் சுற்­றுடன் வெளி­யே­றிய இலங்கை, கடந்த மாதம் இங்கு நடை­பெற்ற 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்­பாப்­வே­யிடம் 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் முற்­றிலும் எதிர்­பா­ராத வித­மாக இலங்கை தோல்வி அடைந்­தது.

இதன் எதி­ரொ­லி­யாக அணித் தலை­மைத்­து­வங்­களில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சும­தி­பால (52 வயது) சூதாட்­டத்­துடன் தொடர்­பு­பட்­ட­வ­ரெ­னவும் இதன் கார­ண­மாக அவர் தலைவர் பதவியில் தொடர அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது எனவும் அர்­ஜுன ரண­துங்க குறிப்­பிட்டார். எனி னும் அர்­ஜு­னவின் சூதாட்டக் குற்­றச்­சாட்டை சும­தி­பால நிரா­க­ரித்­துள்ளார்.

‘‘அணியில் முறை­யான கட்­டுப்­பாட்­டு­டன்­கூ­டிய ஒழுங்­கு­முறை இல்லை. கிரிக்கெட் வீரர்கள் சூதாட்­டத்தில் சிக்­க
வி­டப்­ப­டு­வதால் அவர்ளை சாடு­வதில் அர்த்­த­மில்லை. முதலில் அதி­கா­ரிகள் ஒழுங்­காக செயற்­ப­ட­வேண்டும்’’ என ஏ.எவ்.பி.க்கு  அர்­ஜுன  தெரி­வித்தார்.

ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­ப­டு­மாறு வீரர்­களைத் தூண்டும் முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­தென தக­வல்கள் கூறு­கின்­றன.
ஆட்ட நிர்­ண­யத்தில் தொடர்­பு­பட்­ட­மைக்­காக அல்­லது விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழை­யா­த­மைக்­காக அதி­கா­ரிகள், மத்­தி­யஸ்­தர்கள், வீரர்கள் என பலர் தடை அல்­லது அபரா­தத்­திற்கு உட்­பட்­டுள்­ளனர். 

சூதாட்­டத்­துடன் சும­தி­பா­ல­வுக்கு தொடர்பு இருப்­ப­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக சர்­வ­தேச கிரிக் கெட் பேரவை விசா­ரணை நடத்­து­வ­துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் குறித்தும் விசா­ரணை நடத்த வேண்டும் என அர்­ஜுன ரண­துங்க கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் முகா­மைத்­து­வத்தில் உள்­ள­வர்கள் ஒழுக்­க­நெ­றி­க­ளுக்கு கட்­டுப்­பட்டு செயற்­ப­டு­கின்­றார்­களா என்­பது குறித்து விசா­ரணை செய்ய சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வைக்கு முது­கெ­லும்பு இருக்­கின்­றதா என்­பதைத் தெரிந்­து­கொள்ள விரும்­பு­வ­தா­கவும் அர்­ஜுன ரண­துங்க குறிப்­பிட்டார்.

இது குறித்து ஐ.சி.சியி­ட­மி­ருந்து உட­ன­டி­யாக எவ்­வித பதிலும் அளிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் ரண­துங்க சுமத்தும் குற்­றச்­சாட்­டுக்­களை சும­தி­பால நிரா­க­ரித்­துள்ளார்.

அத்­துடன் கிரிக்கெட் சபையைப் பொறுப்­பேற்கும் வகையில் ரண­துங்க கறை­ப­டுத்தும் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் சும­தி­பால தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம், ஆசிய கிரிக்­கெட் பேரவை, சரவ்­தேச கிரிக்கெட் பேரவை ஆகி­ய­வற்றில் பதவி வகிப்­ப­தற்கு  விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் ஐ.சி.சி.யும் தனக்கு அனு­மதி வழங்­கி­ய­தா­கவும் சும­தி­பால கூறினார்.

தனிப்­பட்ட ரீதி­யிலும் நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மா­கவும் சூதாட்ட வர்த்­த­கத்தில் தனக்கு தொடர்பு எதுவும் இல்லை என ஏ.எவ்.பி.க்கு சுமதிபால தெரிவித்தார்.

(Visited 71 times, 1 visits today)

Post Author: metro