புகைப் பிரியரான கணவனின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக வீட்டில் 7 அடி உயரத்தில் கஞ்சா செடியை வளர்த்த பெண் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கஹட்­ட­கஸ்­தி­ஹி­லிய – கோன்­வெவ பிர­தே­சத்தில் தனது கண­வனின் பாவ­னைக்­காக வீட்­டி­லேயே கஞ்சா செடி‍யை நட்டு வைத்து அதனை பரா­ம­ரித்­து­வந்த 50 வய­தான  மனை­வியை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

arrested2கஹட்­ட­கஸ்­தி­ஹி­லிய பொலிஸ் நிலைய துஷ்­பி­ர­யோகத் தடுப்பு பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போது வீட்­டுக்கு பின்­பு­ற­மாக சுமார் 7 அடி உய­ர­மான கஞ்சா செடி­யொன்று வளர்க்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சந்­தேக நப­ரான பெண்ணை குறித்த கஞ்சா செடி­யு­ட­னேயே பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இவ­ரது கணவன் கஞ்சா புகைப்­ப­தற்கு அடி­மை­யா­ன­வ­ரெ­னவும் அவ­ரது ஆசையை நிறை­வேற்­று­வ­தற்கு இப்பெண் இவ்­வாறு கஞ்சா செடியை வளர்த்து அதி­லி­ருந்து இலை­களைப் பெற்று கஞ்சா சுருட்டு தயா­ரித்து கண­வ­னுக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அச்­ச­செ­டிக்கு நீர் பாய்ச்சி அதனை உரிய முறையில் பரா­ம­ரித்து வந்­தி­ருந்தார் என்றும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதே­வேளை, இப்­ பெண்ணின் கண­வரும் இதற்கு முன்னர் இரு தட­வைகள் கைதா­ன­வ­ரென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தே­க­ந­ப­ரான பெண்ணை கைது செய்த வேளையில் குறித்த செடி­யி­லி­ருந்த சுமார் 1 கிலோ­கிராம் கஞ்­சாவை கைப்­பற்­றி­யி­ருந்­த­தா­கவும் அவற்றை உலர வைத்­ததன் பின்னர் அவை 250 கிராம் நிறை­யு­டைய கஞ்சா கிடைக்­கு­மென தெரி­விக்கப்பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­ப­ரான பெண் அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­படுத்தப்­பட்ட வேளையில் குற்­றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்துள்ளார். 

(Visited 71 times, 1 visits today)

Post Author: metro