பஸ் ஆசனத்தில் பற்குச்சிகள்; சிங்கப்பூர் பொலிஸார் தீவிர விசாரணை

சிங்­கப்பூர் பஸ் ஒன்றின் ஆச­னத்தில் பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் அந்­ நாட்டுப் பொலிஸார் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

toothpick-bus---singaporeஉலகின் மிகச் சிறிய நாடு­களில் ஒன்­றான சிங்­கப்பூர், பெரும் செல்­வந்த நாடு­களில் ஒன்­றாகும். குற்­றங்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­வதால் குற்­றச்­செ­யல்­களின் எண்­ணிக்­கை­களும் குறை­வாக உள்­ளன.

இந்­நி­லையில், பஸ் ஆச­னத்தில் பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் சிங்­கப்பூர் பொலிஸார் தீவிர விசா­ரணை நடத்­து­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொதுப்­ போக்­கு­வ­ரத்து பஸ் ஆச­ன­மொன்றில் 3 பற்­குச்­சிகள் குத்­தப்­பட்­டி­ருந்­தன.

அந்த ஆச­னத்தில் அம­ர­வி­ருந்த பெண் ஒருவர், இக்­ காட்­சியை படம்­ பி­டித்து பேஸ்­புக்கில் வெளியிட்டார். 2,500 இற்கும் அதி­க­மான தடவை இப்­ப­திவு பகி­ரப்­பட்­டது.

இந்­நி­லையில், கண்­கா­ணிப்புக் கெம­ராக்­களின் உத­வி­யுடன் தீவிர விசா­ரணை நடத்­தப்­பட்­டதன் மூலம் சந்­தேக நபர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக சிங்­கப்பூர் பொலிஸார் தெரி­வித்­துள்னர்.

60 வய­தான சிங்­கப்பூர் நபர் ஒருவர் விசா­ர­ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் குற்றவாளியென நிருபிக் கப்பட்டால் 2 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 
 

(Visited 95 times, 1 visits today)

Post Author: metro